ஏனையவை
வெப்பமான காலநிலை முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள்!
கிழக்கு, ஊவா, வடக்கு, வடமத்திய, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று மாலை அல்லது இரவில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளையில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தற்போது நிலவும் வெப்பமான காலநிலை சற்று குறைவடையும் வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.