Tag: Ranil Wickramasinghe

  • அமைச்சர்களிடம் செலவுகளை குறைத்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி வேண்டுகோள்!

    அமைச்சர்களிடம் செலவுகளை குறைத்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி வேண்டுகோள்!

    இலங்கை அமைச்சர்களின் செலவுகளை குறைத்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளதாக அமைச்சரவை செய்தித்தொடர்பாளரும், போக்குவரத்து அமைச்சருமான பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். தொடரும் பொருளாதார நெருக்கடி காரணமாக பட்ஜெட்டில் ஒவ்வொரு அமைச்சுக்கும் ஒதுக்கப்பட்ட நிதியில் 5 சதவீத செலவினங்களை குறைத்துக் கொள்ளுமாறு அமைச்சர்களுக்கு யானதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். இந்த ஆண்டின் முதல் சில மாதங்களில் வரிகள் மூலம் ஈட்ட நினைத்திருந்த வருவாய், குறைவாகத்தான் கிடைக்கும் என்று கருதுகிறோம். ஜனவரி, பிப்ரவரி மாதங்களுக்கு அரசு ஊழியர்களுக்கு ஊதியம் அளிப்பதிலும்…

  • பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி – ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானம்!

    பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி – ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானம்!

    உள்ளூராட்சிமன்ற தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிடுவதற்கு ஆளும் கூட்டணியின் இரு பிரதான பங்காளிகளும் தீர்மானித்துள்ளன. இலங்கையில் ஆட்சியில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியும், இலங்கை பொதுஜன பெரமுனாவும் கூட்டணி அமைத்து நடைபெறவுள்ள உள்ளுராட்ச்சிமன்ற தேர்தலை எதிர்கொள்ள தீர்மானித்துள்ளன. இரு தரப்பு பிரதிநிதிகளுக்கும் இடையில் கொழும்பில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் , சில உள்ளுராட்ச்சி சபைகளுக்கு யானை சின்னத்திலும், சில சபைகளுக்கு மொட்டு சின்னத்திலும் ஏனைய பகுதிகளில் பொது சின்னத்தின் கீழும் போட்டியிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.…

  • பிரேசிலில் தொடரும் வன்முறை – ஜனாதிபதி கண்டனம்

    பிரேசிலில் தொடரும் வன்முறை – ஜனாதிபதி கண்டனம்

    பிரேசிலில் இடம்பெற்றுவரும் ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகளை கண்டிப்பதாக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரேசில் நாட்டில் அண்மையில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி போல்சனேரோ தோல்வியடைந்த நிலையில் . முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றிபெற்றார். இதனை தொடர்ந்து பிரேசிலின் புதிய ஜனாதிபதியாக லூயிஸ் பொறுப்பேற்றுக்கொண்டார். வாக்கு வித்தியாசம் மிகக்குறைவாக இருந்த நிலையில் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளாத போல்சனேரோ தனது ஆதரவாளர்களுடன் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் இந்த நிலையிலேயே பிரேசிலில்…

  • ஜனாதிபதியாக பதவியேற்றபின் முதல்முறையாக இந்தியாவிற்கு பயணிக்கவுள்ள ரணில் விக்ரமசிங்க!

    ஜனாதிபதியாக பதவியேற்றபின் முதல்முறையாக இந்தியாவிற்கு பயணிக்கவுள்ள ரணில் விக்ரமசிங்க!

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஜனவரி 12, 13ஆம் திகதிகளில் ‘உலகளாவிய தெற்கின் குரல்’ மாநாடு இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், ஜனாதிபதியாக பதவியேற்றபின் முதல்முறையாக உலகளாவிய தெற்கு உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் இந்தியாவுக்குச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மாநாட்டில் அண்டைய நாடுகளின் தலைவர்கள் மட்டுமல்லாது , ஆபிரிக்கா அங்கோலா, கானா, நைஜீரியா, மொசாம்பிக், செனகல், தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், உஸ்பெகிஸ்தான், மங்கோலியா, ஐக்கிய அரபு இராச்சியம், பப்புவா நியூ…