இலங்கை

இன்று டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளில் இன்று பதிவாகியுள்ள இலங்கை ரூபாவிற்கு எதிரான டொலரின் பெறுமதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலை கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் முறையே 313.52 ரூபா மற்றும் 336.09 ரூபாவாக மாறாமல் உள்ளது. சம்பத் மற்றும் கொமர்ஷல் வங்கி கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை கடந்த வெள்ளிக்கிழமை 314.16 ரூபாவாக காணப்பட்ட நிலையில் இன்று 314.27 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையில் வர்த்தக வங்கிகளில் இன்று டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்! வெளியான தகவல் | Sri Lanka Rupee And Dollar Rate Today Banks In Sl இதேவேளை விற்பனை விலையானது 332.50 ரூபாவாக மாறாமல் உள்ளது. மேலும் சம்பத் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலை கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் முறையே 315 ரூபா மற்றும் 330 ரூபாவாக மாறாமல் உள்ளது.

Back to top button