ஆன்மிகம்

ராகு கேது பெயர்ச்சி 2023 – 18 ஆண்டுகளுக்குப் பிறகு யோகத்தை பெறப் போகும் 6 ராசிகள்

நவ கிரகங்களில் ராகுவும் கேதுவும் சாயா கிரகங்கள் என்றாலும் மனிதர்களின் நல்லது கெட்டதுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எந்த ஒரு நல்ல காரியம் செய்வதற்கு முன்பாக ராகு காலம் எமகண்டம் பார்த்துதான் செய்கின்றனர். ராகு அள்ளிக்கொடுப்பார். கேது ஞானத்தை கொடுப்பார். ராகுவும் கேதுவும் தந்தைக்காரகன் சூரியனுக்கும் தாய் காரகன் சந்திரனுக்கும் ஆகாத கிரகங்களாக இருக்கின்றன. ராகு கேது பெயர்ச்சி இந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிகழப்போகிறது. 18 ஆண்டுகளுக்கு பிறகு மீனம், கன்னி ராசிக்கு வரப்போகும் ராகு கேதுவினால் எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று சுருக்கமாக பார்க்கலாம்.

மேஷம்: ஜென்ம ராசியில் இருந்த ராகு விரைய ஸ்தானத்திற்கும் கேது ஆறாம் வீடான நோய் எதிரி சத்ரு ஸ்தானத்திற்கும் மாறுகின்றனர். உங்க ராசியில் ஜென்ம ராகுவாக அமர்ந்து ஆட்டிப்படைத்த ராகு இனி விரைய ஸ்தானத்திற்கு மாறுவது சிறப்பு. போட்டி பொறாமை ஒழியும். இதுநாள் வரை தொந்தரவு செய்த நோய்பிரச்சினை நீங்கும். கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம் என்பதன் அடிப்படையில் இப்பொழுது கெட்ட இடத்திற்கு ராகு கேது வருவது நல்லது தான். கேது பெயர்ச்சியால் சிலருக்கு புது வேலை வாய்ப்பு மற்றும் தொழில் அமையும்.

ரிஷபம்: சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே, உங்க ராசிக்கு சாதகமான இடத்திற்கு ராகு கேது வந்திருக்கிறார்கள். ராகு லாப ஸ்தானத்திற்கு மாறுவதால் எதிர்பாராத யோகத்தையும் திடீர் பண வரவையும் கொடுப்பார். மோட்ச காரகன் கேது பூர்வ பூண்ணிய ஸ்தானமான 5ஆம் வீட்டில் வருவது யோகம் தான். சுப காரியங்கள் தடைகள் நீங்கி சந்தோஷமாக நடக்கும்.

மிதுனம்: லாப ஸ்தானத்தில் இருந்த ராகு தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். சொந்த வீடு வாங்கும் யோகம் வரும், சுப காரியங்கள் நல்லமுறையில் கைகூடி வரும். கடன் சுமை குறையும். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் காரியமும் வெற்றியை கொடுக்கும். தொழிலாளியாக இருந்த நீங்கள் முதலாளி ஆகும் யோகம் வரும். இந்த ராகு கேது பெயர்ச்சி மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரும்.

கடகம்: பாக்ய ஸ்தானத்திற்கு ராகுவும் முயற்சி ஸ்தானத்திற்கு கேதுவும் வருகின்றனர். இந்த ராகு கேது பெயர்ச்சியால் விமோசனம் கிடைக்கும். வருமானம் திருப்தி தரும். பாக்ய ஸ்தானத்திற்கு வரும் ராகுவினால் செய்யும் தொழிலில் பார்க்கும் வேலைகளில் இடையூறு நீங்கும்.மறைமுக எதிர்ப்புகள் விலகும். நிர்வாக பொறுப்புகள் தேடி வரும். கேது மாறி வரும் இடம் முன்றாம் பாவம் பிள்ளைகளுக்கு திருமணம் கைகூடி வரும், புத்திர பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். நினைத்த காரியம் கைகூடி வரும்.

சிம்மம்: சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்மம் ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி யோகத்தையும் பெருமை புகழையும் தரப்போகிறது. எதிர்ப்பாராத பணம் பொன் பொருள் சேர்க்கை வீடு வாசல் போன்ற வசதிகளை தருவார். கடன் பிரச்சினைகள் நீங்கும். சிலருக்கு இடமாற்றம்,ஊர் மாற்றம் நேரலாம். இந்த ராகு கேது பெயர்ச்சி மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரும். சிலர் வீட்டுக்கு மேல் வீடு கட்டும் வாய்ப்பு வரும். 2 ல் கேது வருவதால் சொல்லும் செயலும் வெற்றி பெறும். உங்க முயற்சி தன்னம்பிக்கை மூலம் தான் வாழ்க்கையில் முன்னேற்றம் வரும்.

கன்னி: புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே, உங்கள் ராசியில் கேதுவும் 7 ஆம் இடத்தில் ராகுவும் பெயர்ச்சியாகிறார்கள். களத்திரம் கூட்டு தொழில் ஸ்தானம் நண்பர்கள் ஸ்தானத்தில் ராகு அமர்வதால் கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கி ஒன்று சேரலாம். உங்கள் ராசியில் கேது சஞ்சரிப்பதால் கௌரவம் புகழ் கீர்த்தி அந்தஸ்து தரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் உத்யோகத்தில் முன்னேற்றம் வரும்.வருமானம் திருப்தி தரும்.தேவைகள் பூர்த்தியாகும்.குடும்பத்தில் பிள்ளைகள் படிப்புக்கு செலவு செய்வீர்கள். வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபடுங்கள். பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.

துலாம்: சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே, ராசியில் இருந்து கேது விலகுகிறார். விரைய ஸ்தானமான 12 ஆம் பாவத்தில் கேது 6ஆம் பாவத்தில் ராகு வருகிறது. எதிரி போட்டி பொறாமை கடன் வைத்தியசெலவு,ஆகிய ஸ்தானத்தில் ராகு வருவதால் கடன்கள் அடைப்படும் தீராத நோய் தீரும். தொழில் முயற்சிகள் கை கூடும். . உங்களை வாட்டி வதைத்த பிரச்சினைகள் தீரப்போகிறது. படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும். திருமணம் கை கூடி வரும் திருமணமானவர்களுக்கு புத்திர பாக்கியம் கை கூடி வரும். செவ்வாய்கிழமை ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபடுங்கள். நீண்ட நாள் பட்ட கடன்களும் அடைபடும். வம்பு வழக்கு பிரச்சினைகள் நீங்கும்.

விருச்சிகம்: செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, இது வரை 6ஆம் வீட்டில் இருந்த ராகு 5ஆம் இடத்திற்கும் 12ஆம் வீட்டில் இருந்த கேது 11ஆம் இடத்திற்கும் வருகிறார்கள். போதுமான வருமானம் வந்தாலும் நிம்மதி குறைந்த வாழ்க்கை வாழ்ந்த உங்களுக்கு ராகு கேது பெயர்ச்சி நிம்மதியை தரும். கேது லாப ஸ்தானத்தில் வருவதால் தொட்டது துலங்கும். தேவையற்ற செலவுகள் குறையும். அசையா சொத்துகள் வீடு மனை வாங்கும் யோகத்தை கொடுக்கும். 18 வருஷத்துக்கு பிறகு 5ம் இடத்திற்கு ராகு வருவதால் முன்னோர் வகையில் உள்ள தோஷம் நீங்கி சுகம் பெறலாம். வியாழக்கிழமை ராகுகாலத்தில் விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

தனுசு: குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, இதுநாள் வரைக்கும் உங்களைத் திணறடித்த பிரச்சனைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். 4ம் பாவத்திக்கு ராகு வரப்போகிறார். இது நாள் வரைக்கும் தடைப்பட்ட காரியங்களை வெற்றிகரமாக முடிப்பதற்கு உதவுவார்கள். தாயார் வழியில் சில தேவையற்ற செலவுகள் உண்டாகலாம்.பூமி வீடு வாகனம் வாங்கும் யோகத்தை கொடுப்பார். பழைய கடன்கள் அடைப்படும். வரவுகள் அதிகரிக்கும் சேமிப்பும் உயரும். தொழில் நிலை முன்னேற்றத்தை தரும். வேலை வாய்ப்புகள் தேடி வரும் புரமோசன் கிடைக்கும். சனிக்கிழமை ராகு காலத்தில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.

மகரம்: சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே, இது நாள் வரைக்கும் 4ஆம் இடத்தில் இருந்த ராகு 3ஆம் இடத்திலும் 10 இடத்தில் இருந்த கேது 9ஆம் இடத்திற்கும் வருகிறார்கள். ராகு இப்பொழுது யோகத்தை வாரி வழங்க போகிறார். இனி தைரியத்துடன் புது தெம்புடன் செழிப்பான வாழ்க்கை அமையும். புது முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். இது வரை ஏளனம் செய்தவர்கள் எல்லாம் உங்களுடைய முன்னேற்றத்தை பார்த்து வியந்து போவார்கள். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி பெரியவர்கள் தானாக நாடி வந்து உதவி செய்வார்கள். உறவுகள் சொந்தங்களால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபடுங்கள் நன்மையும் சந்தோஷமும் அதிகரிக்கும். சனிக்கிழமையன்று ராகு காலத்தில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

கும்பம்: உங்கள் ராசிக்கு குடும்ப ஸ்தானத்திற்கு ராகுவும் கேது உங்க ராசிக்கு ஆயுள் ஸ்தானத்திற்கும் வருவது சிறப்பு. திடீர் பணவருமானம் வரும் திடீர் அதிர்ஷ்டங்கள் தேடி வரும். அதே நேரத்தில் சேமிக்க முடியவில்லையே என்ற வருத்தம் ஏற்படும் அளவிற்கு செலவுகளும் வரும். வேலை செய்யும் இடத்தில் தேவையில்லாத பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள். தேவையற்ற கோபம், வெறுப்பு உணர்வுகளை கட்டுப்படுத்துங்கள். வீட்டிலும் வெளியிலும் காரசார விவாதங்களை தவிர்த்து விடுங்கள். பண விவகாரங்களில் வாக்கு கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். ராகு காலத்தில் ராகு கேதுவிற்கு அர்ச்சனை பண்ணுங்கள் நல்லதே நடக்கும்.

மீனம்: 18 ஆண்டுகளுக்கு பிறகு மீனம் ராசிக்கு ஜென்ம ராசியில் ராகு வந்து அமர்கிறார். ஜென்ம ராகு, ஏழாம் வீட்டில் கேது இனி 18 மாதங்கள் உங்க ராசியில் சஞ்சரிப்பார்கள். திடீர் பணவருமானம் வரும் செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். வேலையில் திடீர் இடமாற்றம் வரலாம். திடீர் செலவுகள் வரும். சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை வரும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வரும். எந்த வேலையிலும் கவனமாகவும் விழிப்புணர்வோடும் இருப்பது நல்லது. செவ்வாய்கிழமை ராகு காலத்தில் விளக்கு போடுவது அவசியம்.

Back to top button