இலங்கை

எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தம்…! லங்கா ஐஓசி நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு

லங்கா ஐஓசிக்கு சொந்தமான 26 எரிபொருள் நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது. QR ஒதுக்கீட்டை தொடர்ந்து கடைப்பிடிக்காத எரிபொருள் நிலையங்களுக்கு எதிராகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

QR ஒதுக்கீட்டை தொடர்ந்து கடைப்பிடிக்காத 40 எரிபொருள் நிலையங்களை இடைநிறுத்த இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் பெட்ரோலிய சேமிப்பு முனைய நிறுவனத்தின் அதிகாரிகளுடன் அமைச்சர் கஞ்சன விஜேசேகர நடத்திய கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான அறிவிப்பு நேற்றைய தினம் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Back to top button