ஏனையவை

சீனியை கட்டுப்படுத்தி தேவையற்ற கொழுப்புகளை குறைக்கும் கருப்பு அரிசி தோசை

தேவையான பொருட்கள் கருப்பு அரிசி – 1 கிண்ணம் உளுந்து – 1/4 கிண்ணம் வெந்தயம் – 1 தேக்கரண்டி எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை முதலில் எடுத்துக்கொண்ட கருப்பு அரிசி, உளுந்து, வெந்தயத்தை நான்கு மணிநேரம் நீரில் ஊறவைத்துக் கொள்ளவும். பின்னர் அதனை மிக்ஸியில் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு அரைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் 8 மணிநேரம் புளிக்கவிட்டு தோசை கல்லில் எண்ணெய் சேர்த்து தோசை போல ஊற்றி எடுத்து விரும்பிய சட்னியுடன் வைத்து சாப்பிட்டால் சுவையான சத்தான கருப்பு அரிசி தோசை தயார்.

Back to top button