இலங்கை

யாழ். நீர்வேலியில் ஆசிரியர்களின் வீட்டில் கொள்ளை

யாழ்ப்பாணம் நீர்வேலி வீதியில் வசிக்கும் ஆசிரியர் ஒருவரின் வீட்டில் கொள்ளை சம்பவம் இன்று (09.01.2024) அதிகாலை நடைபெற்றுள்ளது.

கொள்ளையர்கள் வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர், வீட்டில் இருந்த தங்கச் சங்கிலிகள், பணம், வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

சம்பவம் குறித்து நீர்வேலி பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டில் இருந்தவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது, இனம் தெரியாத கும்பல் வீட்டினுள் புகுந்தது. உறங்கிக் கொண்டிருந்த ஆசிரியரின் தங்கச் சங்கிலியை அறுத்ததுடன், ஒரு தொகை பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த வீட்டில் வசித்து வந்த கணவன் மனைவி இருவரும் ஆசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Back to top button