இலங்கை

அரச அடக்குமுறை – நாளை நாடு முழுவதும் முடக்கம்

இன்று (14.03.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் நாடளாவிய ரீதியில் நாளை (15.03.2023) சகல தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் மக்களின் தேவைகளை கணிக்காமல், அரசாங்கத்தின் இருப்பை பாதுகாக்க பல செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது.
எனவே மக்களுக்கு ஆதரவாக அதாவது எங்களது கோரிக்கைகளை முன்வைத்தே இந்த அடையாள வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்நிலையில் அரசாங்க அடக்குமுறையை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் ஜனநாயக ஆட்சிக்காக நாளை (15.03.2023) நாடு முழுதும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட அதே அடக்குமுறை செயற்பாடு தற்போது இங்கும் நடைபெறுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், நாடளாவிய ரீதியாக உள்ள அரச பாடசாலைகளில் ஆசிரியர்கள் நாளை ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம்.

ஆசிரியர்களின் சம்பளத்தை உடனடியாக உயர்த்தி ஆசிரியர்களுக்கு 20,000 ரூபா கொடுப்பனவு வழங்குமாறு கோரி இந்த வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படுள்ளது.

Back to top button