இலங்கை

இன்று முதல் ஏப்ரல் 12 வரை வழங்கப்பட்ட அனுமதி!

இன்று (01) முதல் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தொழில் முயற்சியாளர்கள் எவ்வித கட்டணமும் இன்றி வீதியோரங்களில் இருந்து பொருட்களை விற்பனை செய்ய அனுமதிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, உற்பத்தியாளர்கள் இன்று முதல் ஏப்ரல் 12ம் திகதி வரை வீதியோரங்களில் ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட பகுதிகளில் அந்தந்த பகுதியின் பிரதேச செயலாளரின் ஒப்புதலுடனும் மேற்பார்வையுடனும் தங்கள் பொருட்களை விற்பனை செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. மேலும் இதற்காக மஹரகம நகரம் உட்பட பல இடங்களில் இவ்வாறான விசேட இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

Back to top button