ஏனையவை

இலக்கணத்தின் வகைகள்|5 Best topic in tamil Grammar

இலக்கணத்தின் வகைகள்

இலக்கணம் ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. எனவே ஐந்திலக்கணம் என்ற சொல்மரபு வழங்கி வருகிறது. அவை எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகியவை ஆகும். இவற்றில் எழுத்து, சொல் இலக்கணங்கள் மொழிக்கு இலக்கணம் கூறுபவை ஆகும்.

தமிழ் இலக்கணம் – ஒரு அறிமுகம்

தமிழ் இலக்கணம் ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது.

01:எழுத்து இலக்கணம்
02:சொல் இலக்கணம்
03:பொருள் இலக்கணம்
04:யாப்பு இலக்கணம்
05:அணி இலக்கணம்

எழுத்து இலக்கணம்

எழுத்துகளின் வகைகள், ஒலிக்கும் கால அளவு, பிறக்கும் முறை, சந்தி இலக்கணம் ஆகியவை இதில் அடங்கும்.

சொல் இலக்கணம்

பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் போன்ற சொல் வகைகள், திணை, பால், எண், இடம், காலம், தொகை, வேற்றுமை போன்றவை இதில் அடங்கும்.

பொருள் இலக்கணம்

தமிழ் இலக்கியங்களின் பாடுபொருளுக்கு எழுதப்பட்ட இலக்கணம். அகப்பொருள், புறப்பொருள் போன்றவை இதில் அடங்கும்.

யாப்பு இலக்கணம்

செய்யுள்களின் அமைப்பு, ஓசை, பாக்களின் வகைகள் போன்றவை இதில் அடங்கும்.

அணி இலக்கணம்

உவமை, உருவகம், பிறவுருவகம், யாப்பு, சிலேடை தோற்றம் போன்றவை இதில் அடங்கும்.

பாட்டியல் இலக்கணம்

தூது, உலா, அந்தாதி, மாலை, பிள்ளைத்தமிழ் போன்றவை இதில் அடங்கும்.

புதிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

எங்களுடைய Android App தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

எங்களுடைய Apple store இல் செயலியை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

மேலும் WhatsApp சேனல் மூலம் தகவல்களை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button