இலங்கை
இலங்கையர் ஒருவர் கட்டாரில் விபத்தில் சிக்கி உயிரிழப்பு!

ஐக்கிய அரபு நாடுகளான கட்டாரில் கோர விபத்தில் இலங்கையர் ஒருவர் மரணமடைந்துள்ளார். அம்பாறை கல்முனையை சேர்ந்த 33வயதுடைய தந்தை ஒருவரே உயிரிழந்துள்ளார்.வாகனத்தில் மூன்று பேர் பயணித்துள்ளதாகவும் அதில் ஒருவரே உயிரிழந்துள்ளதாகவும் மற்றைய இருவரும் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளனர்.