ஏனையவை

இலங்கை மக்களுக்கு பாரியளவில் நிவாரணம் வழங்கும் அரசாங்கம்

20 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் நலன்புரி பயன் வேலைத்திட்டம் எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படும்.

நான்கு பிரிவுகளின் கீழ் 20 இலட்சம் வறிய குடும்பங்களுக்கு குறிப்பிட்ட காலப்பகுதிக்காக இந்த நிவாரணம் வழங்கப்படும்.

இதன்படி மிகவும் வறியவர்கள் என்ற பிரிவின் கீழ் அடையாளம் காணப்படும் நான்கு இலட்சம் குடும்பங்களுக்கு மூன்று வருடங்கள் வரை மாதாந்தம் 15 ஆயிரம் ரூபா நிவாரணம் வழங்கப்படும்.

வறியவர்கள் என்ற பிரிவின் கீழ் எட்டு இலட்சம் குடும்பங்களுக்கு மூன்று வருடங்கள் வரை மாதாந்தம் எட்டாயிரத்து 500 ரூபா வழங்கப்படும்.

அவதானத்திற்கு உள்ளானவர்கள் என்ற பிரிவின் கீழ் நான்கு இலட்சம் குடும்பங்களுக்கு மாதாந்தம் ஐயாயிரம் ரூபா வழங்கப்படும்.

சாதாரண பிரிவின் கீழ் நான்கு இலட்சம் குடும்பங்களுக்கு எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதி வரை இரண்டாயிரத்து 500 ரூபா வீதம் வழங்கப்படும்.

குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் பயனாளிகளை வலுவூட்டுவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

Back to top button