![](https://tamilaran.com/wp-content/uploads/2023/03/images-1.jpg)
அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் 2022 ஆம் ஆண்டில் குறைந்து வரும் உணவு உற்பத்தி மற்றும் பணவீக்கம் காரணமாக இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐம்பத்தொன்பது (59) வீதமான குடும்பங்கள் தேவையான உணவின்றி தவித்தாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடும் உணவுப் பற்றாக்குறை அத்துடன், “இலங்கையில் 28 சதவீதம் அல்லது 6.3 மில்லியன் மக்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளனர்” என்று தெரியவந்துள்ளது.
மேலும் விவசாய உற்பத்தியை அதிகரிப்பது, பூச்சிகளால் ஏற்படும் பயிர் அழிவை குறைந்தபட்சமாக குறைப்பது, அறுவடைக்குப் பிந்தைய பயிர் அழிவைத் தடுப்பது மற்றும் விவசாயத் துறையில் புதுமையான முறைகளை அறிமுகப்படுத்துவது மற்றும் உணவைப் பெறுவதற்கான நம்பகத்தன்மையை அதிகரிப்பது ஆகியவை இப்பாதிப்பிலிருந்து மீள்வதற்கான் மாற்று வழிகளாக எடுத்துக்காட்டப்பட்டன.