இலங்கை

உள்ளூராட்சி நிறுவனங்களின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராய்வு!

மார்ச் 19 நள்ளிரவுடன் பதவிக்காலம் முடிவடையும் 340 உள்ளூராட்சி நிறுவனங்களின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் பராமரிப்பு குறித்து இலங்கை அரசாங்கம் கலந்துரையாடியுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. அலரி மாளிகையில் நடைபெற்ற விசேட சந்திப்பில், பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் ஆளுநர்கள் இந்த விடயம் தொடர்பில் கலந்தாலோசித்துள்ளனர். விசேட சந்திப்பு இந்த கலந்துரையாடலில் 9 மாகாணங்களின் ஆளுநர்களான டிக்கிரி கொப்பேகடுவ (சப்ரகமுவ), வசந்த கரணாகொட (வடமேற்கு), எம்.ஜே.எம். முசம்மில் (ஊவா), மஹிபால ஹேரத் (வடமத்திய), வில்லி கமகே (தென்), லலித் யூ. கமகே (மத்திய), அனுராதா யஹம்பத் (கிழக்கு) ரொஷான் குணதிலக்க (மேற்கு) மற்றும் ஜீவன் தியாகராஜா (வடக்கு), ஆகியோர் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Back to top button