ஏனையவை

மறைந்த பாடகர் SP பாலசுப்பிரமணியம் அவர்களை பற்றி ஒரு சில வரிகள்.

கலைஞர். பாலசுப்பிரமணியம், தெலுங்கு குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை அரிகதை காலட்சேபக் கலைஞர். பாலசுப்பிரமணியம் இளம் வயதிலேயே இசையில் ஆர்வம் காட்டினார். அவர் ஆர்மோனியம், புல்லாங்குழல் போன்ற இசைக் கருவிகளை வாசிக்கவும் கற்றுக்கொண்டார்.

பாலசுப்பிரமணியம் பொறியாளராக வேண்டும் என்ற நோக்கத்தோடு ஜே.என்.டி.யு பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் குடற்காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சென்னையிலுள்ள பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார்.

இசையில் ஆர்வம் கொண்ட பாலசுப்பிரமணியம், கல்லூரியில் படிக்கும் போதே பல பாடல் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்றார். 1964 ஆம் ஆண்டு சென்னையிலுள்ள தெலுங்கு கலாச்சார நிறுவனம் நடத்திய இசை நிகழ்ச்சியில் பாடி முதல் பரிசைப் பெற்றார்.

ஆரம்பகாலத்தில் மெல்லிசைக் குழு ஒன்று நடத்தி வந்தார். இக்குழுவில் அனிருத்தா, இளையராஜா, பாஸ்கர், கங்கை அமரன் போன்றோர் பங்கு பெற்றனர். இவர்களோடு சேர்ந்து பாலசுப்பிரமணியம் இசை நிகழ்ச்சிகளையும் நாடகக் கச்சேரிகளில் பாடல்கள் பாடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார்.

எஸ் பி கோதண்டபாணி, கண்டசாலா ஆகியோர் நடுவராக இருந்து பங்குபெற்ற பாடல் போட்டியில் சிறந்த பாடகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அடிக்கடி இசையமைப்பாளர்களை சந்திப்பதும், பாட வாய்ப்புக் கேட்பதுமாக இருந்த இவருக்கு முதல் போட்டி பாடல் பி. பி. ஸ்ரீனிவாஸ் பாடிய ‘நிலவே என்னிடம் நெருங்காதே’ என்ற பாடலாகும். பி. பி. ஸ்ரீனிவாஸ் இவருக்கு தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், சமசுகிருதம், ஆங்கிலம், உருது போன்ற பல மொழிகளில் தனது பாடல்களை எழுதிக் கொடுத்துள்ளார்.

பாலசுப்பிரமணியம் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, ராஜஸ்தான், ஒடியா, அசாமி, போடோ, நேபாளி, சிங்களம், சீனம், ஆங்கிலம், உருது போன்ற 16 மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். இவர் பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளார்.

பாலசுப்பிரமணியம் இந்தியத் திரைப்படத்துறையில் ஒரு முக்கியமான பாடகராவார். இவரது பாடல்கள் இன்றுவரை மக்களால் மறக்கப்படாமல் உள்ளன.

Back to top button