இலங்கை

எரிபொருள் நிலையங்களில் ஏற்படவுள்ள மாற்றம்; மக்களுக்கு கிடைக்கவுள்ள வசதிகள்!

இலங்கையின் எரிபொருள் சந்தையில் நுழையத் திட்டமிட்டுள்ள இரண்டு வெளிநாட்டு நிறுவனங்கள் பல்வேறு திட்டங்களை முன்வைத்துள்ளது. அதற்கமைய, கார் கழுவுதல், சேவை நிலையங்கள், கடைகள் மற்றும் தற்காலிக தங்குமிடங்களுடன் அனைத்து நோக்கங்களுக்கான எரிபொருள் நிலையங்களை அமைக்கவும், QR குறியீட்டு முறைகள் இல்லாமல் எரிபொருள் விநியோகத்தை செயல்படுத்தவும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

அரசாங்க அதிகாரிகள் மற்றும் சீன அரசுக்கு சொந்தமான சினோபெக் மற்றும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட RM Parks-Shell ஆகியவற்றின் பிரதிநிதிகளுடனான சமீபத்திய பேச்சுவார்த்தையின் போது இந்த யோசனைகள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் இந்த யோசனைக்கு அரசாங்கம் இணங்கியுள்ளதுடன், இது முக்கியமாக வெளி மாகாணங்களில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பயன்படுத்தப்படவுள்ளது.

சீன மற்றும் அமெரிக்க நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள்

தற்போதுள்ள QR முறையின் கீழ் எரிபொருள் வழங்குவதில் இருந்து விலக்கு அளிக்கலாம் என்றும் அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்போது கார் கழுவுதல், சேவை நிலையங்கள், கடைகள் மற்றும் தற்காலிக தங்குமிடங்களுடன் அனைத்து நோக்கங்களுக்கான எரிபொருள் நிலையங்களை அமைக்க அடுத்த மாத தொடக்கத்தில் இதற்கான சீன மற்றும் அமெரிக்க நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்றாவது நிறுவனமான அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியமும் விரைவில் இலங்கை சந்தையில் நுழையவுள்ளது. மேலும் மூன்று நிறுவனங்களும் இணைந்து ஆண்டுக்கு 2.2 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான எரிபொருளை இறக்குமதி செய்யும், இது திரைச்சேறி மீதான சுமையை குறைக்கும் என்று அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது.

Back to top button