ஏனையவை
கருவளையம் நிரந்தரமாக நீங்க உதவும் காபி தூள்: எப்படி பயன்படுத்துவது?

கருவளையம் (Dark Circles) என்பது இன்று பலருக்கும் பொதுவான ஒரு பிரச்சனை. தூக்கமின்மை, மன அழுத்தம், நீண்ட நேரம் ஸ்க்ரீன் பார்க்கும் பழக்கம் போன்றவை இதற்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன. இந்தக் கருவளையங்களை குறைக்க வேணும் என்றால், உங்கள் கிச்சனிலேயே இருக்கும் காபி தூளை பயன்படுத்தலாம் என்பதை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பு குறைவு!

கருவளையம் – ஏன் காபி தூள் சிறந்தது?
- Antioxidants அதிகம் உள்ளது
- Anti-inflammatory தன்மை கொண்டது
- இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் திறன்
- தோலை பளிச்சென்று மாற்றும் சக்தி
கருவளையம் – காபி தூள் பேக் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
- காபி தூள் – 1 மேசைக்கரண்டி
- தேன் – 1 மேசைக்கரண்டி
- தண்ணீர் – சில துளிகள் (தேவைக்கேற்ப)



தயாரிக்கும் முறை:
- ஒரு சிறிய கிண்ணத்தில் காபி தூள், தேன் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து பேஸ்ட் போல ஆக்கவும்.
- இதனை கண் சுற்றுப் பகுதியில் மெதுவாக தடவி, 15 நிமிடங்கள் விட்டுவிடவும்.
- பின் சிறிது வெதுவெதுப்பான நீரில் கழுவி முகம் துடைக்கவும்.
வாரத்திற்கு 3 முறை இதை பயன்படுத்தினால் சிறந்த முடிவுகளை காணலாம்.
புதிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
எங்களுடைய Android App தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
எங்களுடைய Apple store இல் செயலியை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
மேலும் WhatsApp சேனல் மூலம் தகவல்களை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.