வீட்டில் தேங்காய் இல்லையா?அசத்தல் கொத்தமல்லி சட்னி!
வீட்டில் தேங்காய் இல்லையா?அசத்தல் கொத்தமல்லி சட்னி!
பொருளடக்கம்
இட்லி, தோசைக்கு புதிய சுவை!
பொதுவாக இட்லி, தோசைக்கு தேங்காய் சட்னிதான் செய்வோம். ஆனால், ஒரு மாற்றத்திற்காக இந்த கொத்தமல்லி சட்னியை ட்ரை செய்து பாருங்கள். தேங்காய் இல்லாமலும், சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும் இந்த சட்னி உங்களுக்கு பிடிக்கும்.
ஆரோக்கியத்தின் அமுதம்:
- செரிமானத்திற்கு உதவி: கொத்தமல்லியில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை எளிதாக்கி, வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளைத் தடுக்கிறது.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்: இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி, நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாக்கின்றன.
- இதய ஆரோக்கியம்: கொத்தமல்லியில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
- சரும ஆரோக்கியம்: கொத்தமல்லியில் உள்ள வைட்டமின் K சருமத்தின் நெகிழ்ச்சியை அதிகரித்து, முகப்பரு மற்றும் வீக்கத்தை குறைக்கிறது.
தேவையான பொருட்கள்
- நல்லெண்ணெய் – 2 தே.கரண்டி
- உளுத்தம் பருப்பு – 1 தே.கரண்டி
- கடலைப் பருப்பு – 1தே.கரண்டி
- வரமிளகாய் – 3
- பூண்டு – 10 பல்
- பெரிய வெங்காயம் – 2
- பச்சை மிளகாய் – 1
- உப்பு – சுவைக்கேற்ப
- பெருங்காயத் தூள் – 1/4 தே.கரண்டி
- புளி – சிறிய துண்டு
- பொட்டுக்கடலை – 1 மேசைக்கரண்டி
- கொத்தமல்லி – 1/2 கட்டு
- தண்ணீர் – தேவையான அளவு
தாளிப்பதற்கு தேவையானவை
- நல்லெண்ணெய் – 2 தே.கரண்டி
- கடுகு – 1/2 தே.கரண்டி
- சிறிய வெங்காயம் – 1
- வரமிளகாய் – 1
- கறிவேப்பிலை – 1 கொத்து
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பு ஆகியவற்றை நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் வரமிளகாய், பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தேவையானளவு உப்பு சேர்த்து வெங்காயம் பொன்நிறமாகும் வரையில் நன்றாக வத்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து பெருங்காயத் தூள், புளி, பொட்டுக்கடலை ஆகியவற்றை அதில் சேர்த்து 2 நிமிடங்கள் வரையில் நன்றாக வதக்கி, பின்னர் அதனுடன் கொத்தமல்லியை சேர்த்து லேசாக வதக்கி இறக்கி குளிரவிட வேண்டும்.
அவை ஆறியதும் ஒரு மிக்சர் ஜாரில் போட்டு நன்றாக அரைத்துஈ ஒரு கிண்ணத்தில் எடுத்து, தேவையான அளவு நீரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
கடைசியாக ஒரு பாத்திரத்டதை அடுப்பில் வைத்த, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெங்காயம், வரமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்து கிளறினால் அவ்வளவு தான் சுவையான மல்லி சட்னி தயார்.
குறிப்பு:
- புளிக்கும் அளவு நீர் சேர்க்கவும்.
- சுவைக்கேற்ப பொருட்களின் அளவை சேர்த்துக்கொள்ளலாம்.
இந்த சட்னியை இப்போதே செய்து, உங்கள் உணவை இன்னும் சுவையாக மாற்றுங்கள்!
புதிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
எங்களுடைய Android App தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
எங்களுடைய Apple store இல் செயலியை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
மேலும் WhatsApp சேனல் மூலம் தகவல்களை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.