ஏனையவை

சனியின் நட்சத்திர பெயர்ச்சி! எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள் யார்?

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்திற்கு முக்கியத்துவம் உண்டு. அதிலும் கும்பம் மற்றும் மகர ராசியின் அதிபதியாக விளங்கும் சனி கிரகத்திற்கும் முக்கியத்துவம் உண்டு. நட்சத்திரங்களின் படி பூசம், அனுஷம், உத்திராடம் இவற்றிற்கு அதிபதி சனி காணப்படுகின்றார். கடந்த மார்ச் 15ம் தேதி சனி சதய நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் பெயர்ச்சி அடைந்துள்ளார். அக்டோபர் 17 வரை இருக்கும் சனிப்பெயர்ச்சியின் போது சிரமங்களை சந்திக்கும் ராசியினைக் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

கடகம் – கடக ராசிக்காரர்களின் ஆரோக்கியத்திலும் ஏற்ற தாழ்வுகள் காணப்படுவதுடன், செலவுகளும் அதிகரித்து, நிதி சிக்கல்களையும் சந்திக்க நேரிடும். மேலும் முதலீடு செய்வதை தவிர்க்கவும்.

கன்னி – கன்னி ராசிகளுக்கு பொருளாதார இழப்பையும், சில பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடம், தேர்வு எழுதும் மாணவர்கள் சற்று கவனமாக இருக்கவும். உடல் நலத்தில் அக்கறை கொள்ளவும்.

விருச்சிகம் -உடல்நலத்தில் பிரச்சினை ஏற்படுவதுடன், பூர்வீக சொத்துக்களை பெறுவதிலும் சிக்கலும், வாகன விபத்தினை சந்திக்கும் நிலையும் ஏற்படலாம் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

கும்பம் – கும்ப ராசியினருக்கு எதிர்பாராத பிரச்சினைகள், மனைவியுடன் கருத்து வேறுபாடு, உடல்நிலை மோசமடைந்தல் போன்ற பிரச்சினையை ஏற்படுத்தும்.

மீனம் – மீன ராசிக்காரர்கள் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளையும், பணம் சம்பந்தமாக பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடும்.

Back to top button