வீட்டிலேயே சுவையான சீனி சம்பல்: இலங்கையின் பாரம்பரிய சைடிஷ்!
பொருளடக்கம்
இலங்கையின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றான சீனி சம்பல், அதன் தனித்துவமான சுவை மற்றும் நறுமணத்தால் பலரையும் கவர்ந்துள்ளது. வீட்டிலேயே எளிதாக தயாரிக்கக்கூடிய இந்த சுவையான சைடிஷ், உங்கள் அன்றாட உணவுக்கு ஒரு புதிய அனுபவத்தைத் தரும். இந்தப் பதிவில், சீனி சம்பலை வீட்டிலேயே செய்யும் முறையை படிப்படியாக விளக்கியுள்ளோம்.
தேவையான பொருட்கள்
- வெங்காயம்- 3
- கடலைஎண்ணெய்- 8 ஸ்பூன்
- பட்டை- 2 துண்டு
- ஏலக்காய்- 10
- அன்னபூர்ணா இலை- 6
- கறிவேப்பிலை- 1 கொத்து
- சர்க்கரை- 50g
- புளி- 75g
- உப்பு- தேவையான அளவு
- மிளகாய் தூள்- ஒரு ஸ்பூன்
சீனி சம்பல் செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றாமல் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு அதை அப்படியே தனியாக எடுத்து வைக்கவும்.
அடுத்து கடாயில் கடலைஎண்ணெய் ஊற்றி சூடான பிறகு பட்டை, ஏலக்காய், அன்னபூர்ணா இலை, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
இதனிடையே புளியை தண்ணீரில் கரைத்து புளி தண்ணீரை கடாயில் ஊற்றி உப்பு, சர்க்கரை சேர்க்கவும்.
சர்க்கரை உருகியவுடன் மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும்படி நன்கு வதக்கவும்.
இப்போது வதக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு கலந்துவிட 5 நிமிடங்களில் ஜாம் பதத்திற்கு வந்துவிடும்.
அவ்வளவுதான் சுவையான சீனி சன்பல் தயார். சாப்பிட்டு விட்டு மீதியை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.
புதிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
எங்களுடைய Android App தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
எங்களுடைய Apple store இல் செயலியை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
மேலும் WhatsApp சேனல் மூலம் தகவல்களை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.