உடல்நலம்
செம்பருத்தி பூவின் அற்புத மருத்துவ பயன்கள்| 3 Best Thing About Hibiscus flower
பொருளடக்கம்
செம்பருத்தி பூவின் மருத்துவ குணங்கள்:
தலைமுடிக்கு:
- செம்பருத்தி பூ சாற்றுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி, வடிகட்டி தினமும் தடவி வர தலைமுடி கருத்து அடர்த்தியாக வளரும்.
- செம்பருத்தி பூ இதழ்களை அரைத்து தலையில் தடவி ஊற வைத்துக் குளிக்க தலைப் பேன்கள் குறையும்.
மாதவிடாய் பிரச்சனைகளுக்கு:
- மாதவிடாய் காலத்தில் அதிகமாக உண்டாகும் குருதி பெருக்கிற்கு பத்து செம்பருத்தி பூவின் இதழ்களை நெய்யில் வதக்கி சாப்பிட வேண்டும்.
சிறுநீர் பிரச்சனைகளுக்கு:
- செம்பருத்தி பூ இதழின் வடிசாறு சிறுநீர் கழிக்கும் பொழுது உண்டாகும் எரிச்சலை நீக்கும்.
- நீர் சுருக்கை போக்கி சிறுநீரை பெருக்கி நஞ்சுகளை வெளியேற்றும்.
- இனப்பெருக்க உறுப்பு நோய்களுக்கும் இது மருந்தாகின்றது.
இதய நோய்க்கு:
- செம்பருத்தி பூ இதய நோய் அணுகாமல் தடுக்கும் அற்புதமான டானிக்.
- செம்பருத்தி பூவை பசுமையாகவோ, காய வைத்து பொடி செய்தோ பாலில் கலந்து காலை, மாலை வேளைகளில் குடித்து வர இதய பலவீனம் தீரும்.
வயிற்றுப்புண்களுக்கு:
- உடல் சூடு காரணமாக பலருக்கு வாய்புண், வயிற்றுப்புண் உண்டாகும்.
- அவர்கள் தினம் 10 பூவின் இதழ்களை மென்று சாப்பிட்டால் புண்கள் ஆறும். ஒரு மாதகாலம் தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும்.
சருமத்திற்கு:
- செம்பருத்தி பூ குளிர்ச்சி பொருந்தியது.
- சருமத்திற்கு இதமும், சுகமும் அளித்து ரத்தத்தை சுத்தம் செய்து உடலை பளபளப்பாக்கும்.
சிறுநீர் எரிச்சலுக்கு:
- 10 செம்பருத்திப் பூ இதழ்களை நீரில் இட்டு காய்ச்சி குடித்து வர சிறு நீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் குணமாகும்.
பிற நன்மைகள்:
- செம்பருத்தி பூ உடல் வெப்பத்தை அகற்றி குளிர்ச்சியை உண்டாக்கும்.
- கருப்பை நோய்கள், இதய நோய்கள், ரத்த அழுத்தம் போன்றவைகளுக்கு சிறந்த நிவாரணியாகும்.
- ரத்த சோகை நோய்க்கு செம்பருத்தி பூத்தூளுடன் சம எடை அளவு மருதம் பட்டைத் தூள் கலந்து 1 தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிடலாம்.
குறிப்பு:
- மேற்கூறிய பண்புகள் அனைத்தும் ஆராய்ச்சிகளின் அடிப்படையில் கூறப்பட்டவை.
- எந்தவொரு மூலிகை சிகிச்சையையும் தொடங்குவதற்கு முன் மருத்துவரை அணுகுவது நல்லது.
புதிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
எங்களுடைய Android App தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
எங்களுடைய Apple store இல் செயலியை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
மேலும் WhatsApp சேனல் மூலம் தகவல்களை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்