செல்போன் சத்தம் குறைவாக இருப்பதால் சலிப்பாக இருக்கிறதா? இதோ தீர்வு!

பொருளடக்கம்
நீங்கள் பயன்படுத்தும் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் சத்தம் குறைவாக இருந்தால், அதன் ஒலியை இரட்டிப்பாக மாற்றுவதற்கு சில வழிமுறைகளை இங்கு தெரிந்து கொள்வோம்.

செல்போனில் குறைவான சத்தம்
இன்றைய காலத்தில் ஸ்மார்ட்போன் என்பது நம் அனைவருக்கும் மிகவும் முக்கியமான ஒன்று. அலுவலக வேலை மட்டுமின்றி நமது அன்றாட பணிகளும் ஸ்மார்ட்போன்கள் மூலமாகவே நடைபெற்று வருகின்றது.
ஆனால் சில தருணங்களில் முக்கியமான விடயம் பேசிக்கொண்டிருக்கும் போது, அதன் சத்தம் நமக்கு குறைவாகவே கேட்கும். இந்த பிரச்சனையானது நம்மை தடுமாற வைக்கும்.
இனி அவ்வாறு தடுமாற தேவையில்லை. ஆம் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் குறைவாக கேட்கும் சத்தத்தினை இரட்டிப்பாக உயர்த்த சில வழிமுறைகளை நாம் செய்தால் போதும்.
என்ன செய்ய வேண்டும்?
ஸ்மார்ட்போன் பயனர்கள் முதலில் தங்களது போனில் செட்டிங்ஸ் என்ற ஆப்ஷனுக்குள் செல்லவும்.

பின்பு அங்கிருந்து Sound & Vibration விருப்பத்திற்குச் சென்றால், இதற்குள் Sound quality என்ற ஆப்ஷன்களைப் பெறுவீர்கள்.
இதில் Dolby Atmos ஆப்ஷனைப் பெறும் நீங்கள் இதனை, நாம் ஆட்டோ மோடில் அமைக்க வேண்டும்.
பின்பு கீழே உள்ள Adapt Sound ஆப்ஷனை பார்த்து அதனை ஆஃப் செய்து விட்டு, பயனர்கள் அந்த விருப்பத்தை ‘over 60 years old’ என்று அமைத்து விட்டால், பயனர்கள் தங்களது இயர்போன்களில் அதிக ஒலியை பெறுவார்கள்.
ஆனால் இந்த மாற்றங்களுக்கு பின்பும், ஒலி அளவில் சிக்கல் இருந்தால், தொலைபேசியின் ஸ்பீக்கரில் உள்ள அழுக்குகளையும் பிரஷ் மூலம் சுத்தம் செய்ய வேண்டும்.

இந்த முறை சில போனுக்கு போன் வேறுபடும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளவும்.
புதிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
எங்களுடைய Android App தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
எங்களுடைய Apple store இல் செயலியை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
மேலும் WhatsApp சேனல் மூலம் தகவல்களை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.