இலங்கை
முக்கிய செய்தி

டொலரின் பெறுமதி வீழ்ச்சியால் ஏற்பட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைக் குறைப்பு!

கடந்த சில நாட்களாக இலங்கையின் ரூபாவிற்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி நாளுக்கு நாள் குறைவடைவதன் காரணமாக சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் விரைவாக குறைந்து வருகின்றன. சில வாரங்களுக்கு முன்னர் சந்தையில் சீனி ஒரு கிலோகிராமின் மொத்த விலை 220 ரூபாவாக இருந்ததோடு இன்று அது 200 ரூபாவாக குறைவடைந்துள்ளது. ஒரு கிலோகிராம் பருப்பின் மொத்த விலை 340 ரூபாவிலிருந்து 325 ரூபா வரை குறைவடைந்துள்ளது. அத்துடன் நேற்று நள்ளிரவு முதல் பாணின் விலை குறைவடைந்துள்ளது. மேலும் குறைவடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

Back to top button