
நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய உழைக்கும் போதான வரியை (Pay as You Earn – PAYE Tax), அரச அல்லது அரச பங்குடைமை நிறுவனங்கள் செலுத்துவது இடைநிறுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான சுற்றறிக்கை இவ்வாரத்தில் வெளியிடப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் வருமானம் பெறும் நபர்கள் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரியாகவே இந்த உழைக்கும் போதான வரி விதிக்கப்படுவதாகவும், சில அரச மற்றும் அரச பங்குடைமை நிறுவனங்கள் அந்த வரியை செலுத்துகின்ற சம்பவங்கள் இதற்கு முன்னர் பதிவாகியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலையில் இவ்வாறான முறைகேடுகளை அனுமதிக்க முடியாது என சியம்பலாபிட்டிய சுட்டிக்காட்டியுள்ளார்.