தீரா கடன் பிரச்சனையால் கவலையோடு உள்ளீர்களா? தீர்வு காண எளிய பரிகாரங்கள் இதோ! வெறும் 5 நிமிடங்கள் போதும்
இன்றைய காலகட்டத்தில் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் கடனோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சாதாரண மனிதர்கள் வரை, ஞானியர்கள் வரை அனைவரும் கடன் தீர வேண்டும் என்று தான் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். சாதாரண மனிதர்கள் பணத்தால் ஏற்பட்ட கடனை அடைக்க அருள் செய்யும் படி இறைவனை வேண்டுகிறோம். அதே போல் பெரிய ஞானிகள், பிறவிக் கடன் நீங்க வேண்டும் என இறைவனிடம் வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். சாதாரண மக்கள் கடனை திரும்ப செலுத்த முடியாமல் திணறிப்போய் விடுகின்றனர். கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சினைகளில் இருந்து விடுபட என்னென்ன பரிகாரங்கள் செய்யலாம் என்று பார்க்கலாம்.
கடன் தீர பரிகாரங்கள்
- குலதெய்வ வழிபாடு குறைகளைத் தீர்க்கும்: முந்தைய வினைகளின் காரணமாக, உண்டான கடன் தொல்லைகளிலிருந்து மீள, குலதெய்வ வழிபாடு உங்களுக்குத் துணை செய்யும். மூன்று பெளர்ணமிகள் தொடர்ந்து குலதெய்வ வழிபாடு செய்துவந்தால் கடன் தொல்லைப் படிப்படியாகக் குறையும். ஆண்டுக்கு ஒருமுறை கட்டாயம் குலதெய்வ கோயிலுக்கு சென்றும் வரவேண்டும்.
- பாசி பருப்பும் கடன் தீர்வும்: ஒரு வெள்ளிக்கிழமையன்று, 108 பாசி பருப்புகளை எடுத்து, ஒரு மஞ்சள் துணியில் கட்டி, உங்கள் பணப்பெட்டியில் வைக்கவும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், 10 பருப்புகளை எடுத்து, ஒரு கோவிலில் தானம் செய்யவும்.
- பசுந்தயிர்: ஒரு புதிய மண்பாண்டத்தில் பசுந்தயிர் செய்து, அதில் ஒரு வெள்ளி நாணயத்தை வைக்கவும். தயிர் கெட்டு போகாமல், தினமும் பூஜை அறையில் வைத்து வழிபடவும்.
- வெள்ளி மோதிரம்: வெள்ளிக்கிழமையன்று, வெள்ளியால் செய்யப்பட்ட மோதிரத்தை வலது கை மோதிர விரலில் அணியவும்.
- செவ்வாய்க்கிழமையும் கடன் தொல்லையும்: செவ்வாய்க்கிழமைகளில், வீட்டை சுத்தம் செய்து, குல தெய்வத்திற்கு பூஜை செய்து, கடன் தீர வேண்டும் என்று வேண்டிக்கொள்ளவும்.
- உண்டியல்: ஒரு உண்டியல் வாங்கி, தினமும் சிறிது பணம் சேமிக்கவும். உண்டியல் நிரம்பியதும், அதில் உள்ள பணத்தை கடனை தீர்க்க பயன்படுத்தவும்.
- உப்பு கல்: ஒரு உப்பு கல்லை ஒரு வெள்ளை துணியில் கட்டி, உங்கள் பணப்பெட்டியில் வைக்கவும். இது செல்வத்தை ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது.
- குபேர மந்திரம்: தினமும் குபேர மந்திரத்தை 108 முறை ஜெபிப்பது செல்வ வளத்தை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
- கற்பூரவல்லி: வீட்டில் கற்பூரவல்லி செடி வளர்ப்பது செல்வ வளத்தை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
- சிறுபருப்பு தானம்: வீட்டில் சிறுபருப்பு வாங்கி வைத்து தானம் செய்வது கடன் பிரச்சனை தீர உதவும் என்பது நம்பிக்கை.
- நரசிம்மர் வழிபாடு: செவ்வாய்கிழமை, ஞாயிற்றுக்கிழமை பிரதோஷ நேரத்தில் நரசிம்மர் கோவிலுக்கு சென்று மஞ்சள், தேன் அபிஷேகம் செய்து வழிபடுவது நல்லது.
- சனி ஹோரையில் வழிபாடு: சனிக்கிழமைகளில் சனி ஹோரையில் ஆஞ்சநேயர் அல்லது விநாயகரை வணங்குவது கடன் சுமையை குறைக்கும்.
- பெரிய கோவில்களில் யானைக்கு ஆசி பெறுவது: பெரிய கோவில்களுக்கு சென்று யானையிடம் ஆசி பெறுவது கண் திருஷ்டி நீங்கி கடன் பிரச்சனை தீர உதவும்.
- குளிகை நேரத்தில் கடன் திரும்ப செலுத்துதல்: வாங்கிய கடனில் ஒரு பங்கை, குளிகை நேரத்தில் அடையுங்கள். நிச்சயம் முழு கடனும் தீரும். அதுபோல குளிகை நேரத்தில் கடனே வாங்காதீர்கள். அடகு வைத்த நகைகள் வீடு வந்ததும் நன்கு சுத்தம் செய்து மஞ்சள் நீரில் போட்டு பூஜை அறையில் ஒருநாள் வைத்த பிறகே உபயோகியுங்கள்.
இவற்றில் உங்களால் இயன்ற பரிக்காரங்களை செய்து வர கடன் தொல்லையிலிருந்து விடுபட்ட நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள்.
யாருக்கெல்லாம் கடன் பிரச்சனை ஏற்படும்?
ஒருவரது லக்னத்தில் இருந்து 6-ம் இடம் ருண – ரோக – சத்ரு ஸ்தானம் எனப்படும். ஜாதகத்தில் லக்னத்துக்கு 6-க்கு உடையவர் வலுப்பெற்று இருந்தால், அந்த ஜாதகருக்கு பெருத்த கடன் உண்டாகும். மேலும் எதிரிகளாலும், நோய்களாலும் துன்பப்பட நேரிடும் என்கிறது ஜோதிடம். எனவே கடன் வாங்கும்போதும் அதிகப்படியான கடன் கொடுக்கும்போதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நல்ல நேரங்களைக் கணித்த பிறகே கடனை வாங்க வேண்டும் அல்லது திரும்பக் கொடுக்க வேண்டும். முடிந்தவரை விளக்கு வைத்தபிறகு கடன் கொடுக்காதீர்கள், வாங்காதீர்கள் என்கிறது சாஸ்திரம்.
கடன் வாங்குவதில் கவனம்:
கடன் வாங்குவதற்கு முன் யோசிப்பது:
கடன் வாங்குவது ஒரு பெரிய பொறுப்பு. அதை திருப்பிச் செலுத்தும் திறன் நமக்கு இருக்கிறதா என்பதை கவனமாக யோசிக்க வேண்டும்.
- கடன் தேவையா?
- அதை வேறு எப்படி சமாளிக்க முடியும்?
- கடனை திருப்பிச் செலுத்த முடியாவிட்டால் என்ன நடக்கும்?
ஆடம்பர தேவைகளுக்கு கடன் வாங்கக் கூடாது:
- ஆடம்பர பொருட்களை வாங்க கடன் வாங்குவது தவறானது.
- இது உங்கள் நிதி நிலையை மோசமாக்கும்.
- தேவையற்ற செலவுகளை குறைக்கவும்.
அடைக்க முடியும் என்றால் மட்டுமே அவசிய தேவைக்கு கடன் வாங்க வேண்டும்:
மேலும் இது போன்ற தகவல்களை பெற்றுக்கொள்ள எங்களது www.tamilaran.com என்ற இணைய பகுதி அல்லது mobile apps வழியாக பார்வையிடலாம்.