உடல்நலம்
சளி மற்றும் இருமலுக்கு தீர்வளிக்கும் கமகம தூதுவளை ரசம் 5 நிமிதத்தில் செய்வது எப்படி? A Wonderful Disease-Repelling Rasam
பொருளடக்கம்
கிராமத்து செய்முறையில்
தூதுவளை ரசம்
தூதுவளை ரசம் செய்ய தேவையான பொருட்கள்
தூதுவளை – 1 கப்
பூண்டு – 6 பல்
சின்ன வெங்காயம் – 6
புளி – எலுமிச்சை அளவு
காய்ந்த மிளகாய் – 2
பெருங்காயத்தூள் – 1/2 ஸ்பூன்
கடுகு – 1/2 ஸ்பூன்
தக்காளி – 3
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
நெய் – 2 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
தூதுவளை ரசம் செய்யும் முறை
- ஒரு வாணலியில் நெய் சேர்த்து, கழுவி சுத்தம் செய்த தூதுவளையை சேர்த்து நன்கு வதக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்கும்போது புளி கரைசலையும், அரைத்த தக்காளி விழுதையும் சேர்த்து கலக்கவும்.
- மஞ்சள் தூள், இடித்த பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் சேர்க்கவும்.
- இலையை மிக்ஸியில் அரைத்து சேர்க்கவும்.
- தேவையான அளவு உப்பு சேர்க்கவும். நன்றாக கொதித்து எடுத்துக்கொள்ளவும்.
- தாளிக்க கடாய் வைத்து நெய் ஊற்றி கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்.
- தாளித்ததை ரசத்தில் சேர்க்கவும்.
- கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.
பயன்கள்:
- நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும்.
- ஜீரண சக்தியைத் தூண்டும்.
- தலையில் உள்ள கபம் குறையும்.
- காது மந்தம், இருமல், நமைச்சல், பெருவயிறு மந்தம் போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாகும்.
குறிப்புகள்:
- அதிகம் வதக்காமல் பார்த்துக் கொள்ளவும்.
- தேவைப்பட்டால், கொஞ்சம் கறிவேப்பிலை சேர்க்கலாம்.
- மிளகு மற்றும் சீரகம் தயாரிக்க, மிளகு மற்றும் சீரகம் சேர்த்து வறுத்து, பொடி செய்து கொள்ளவும்.
- இந்த ரசத்தை சாதத்துடன் சாப்பிடலாம்.
- மழைக்காலத்தில் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் சளி, இருமல் வருகிறது. இந்த தூதுவளை ரசம் சளி, இருமலுக்கு நிவாரணமளிக்கும்.
புதிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
- எங்களுடைய Android App தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
- எங்களுடைய Apple store இல் செயலியை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
- மேலும் WhatsApp சேனல் மூலம் தகவல்களை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.