நாட்டின் பல பாகங்களில் மழை காலநிலை தொடரும்!
மேல், சப்ரகமுவ, தெற்கு, ஊவா, மத்திய, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோஅல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமாக கன மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், இடியுடன் கூடிய மழை பெய்யும் தருணங்களில் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும்.
சூரியன் வடக்கு நோக்கிப் பயணிப்பதால், ஏப்ரல் 05 முதல் 15 வரை இலங்கையின் அட்சரேகைகளுக்கு நேர் மேலே உள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன்காரணமாக, இன்று (08) நண்பகல் 12:12 அளவில் பெம்முல்ல, திஹாரிய, புபுரஸ்ஸ, தெரிபெஹெ, வடினாகல மற்றும் திருக்கோவில் ஆகிய பகுதிகளுக்கு சூரியன் உச்சம் கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.