பொருளடக்கம்
பயத்தம் உருண்டை (Payatham Urundai)
பொதுவாக விசேஷங்களுக்கு செய்யப்படும் ஒரு ஸ்பெஷல் ஐட்டம் இது. இதை ஒரு வாரம் முன்னதாக செய்து சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
- பாசிப்பருப்பு (பச்சை பருப்பு) உடைத்து தோல் நீக்கியது – 2 கப்
- வறுத்த அரிசி மாவு – ½ கப்
- துருவிய தேங்காய் – 2 கப்
- சர்க்கரை – 1 கப்
- மிளகு தூள் – ¼ ஸ்பூன்
- சீரக தூள் – ½ ஸ்பூன்
- மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்
- ஏலக்காய் தூள் – ½ ஸ்பூன்
- தேவைப்பட்ட அளவு தண்ணீர்
- அரைத்த வெள்ளை அரிசி மாவு – 1½ கப்
- தண்ணீர்
- உப்பு
- பொரித்தவதற்கு எண்ணெய்
செய்முறை:
- தேங்காயை பொன்னிறமாக வறுத்து பொடியாக அரைக்கவும்.
- பாசிப்பருப்பை நன்கு வறுத்து பொடியாக அரைத்து சலிக்கவும்.
- சர்க்கரையை பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு அகலமான பாத்திரத்தில் பாசிப்பருப்பு மாவு, அரிசி மாவு, தேங்காய், ஏலக்காய் தூள், சர்க்கரை, சீரக தூள் மற்றும் மிளகு தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.
- கொதிக்கும் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து பிட்டு மாவு பதத்திற்கு பிசையவும் – அதிக தண்ணீர் சேர்க்க வேண்டாம். கலவை கொஞ்சம் பொடியாக இருக்க வேண்டும். கட்டிகள் இருக்கக்கூடாது.
- பெரிய உருண்டைகளாக (மார்பில் பந்து அளவு) பிடித்து வைத்துக் கொள்ளவும்.
- வெள்ளை அரிசி மாவு, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் நன்கு கரைத்து ஒரு பத்தரை பதத்தில் கரைசல் செய்து கொள்ளவும்.
- கரைசலில் உருண்டைகளை ஊற வைத்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
- எண்ணெயை வடித்து ஆற வைத்து பின்னர் சேமித்து வைத்துக் கொள்ளவும்.
புதிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
எங்களுடைய Android App தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
எங்களுடைய Apple store இல் செயலியை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
மேலும் WhatsApp சேனல் மூலம் தகவல்களை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.