ஏனையவை
புற்றுநோய் கட்டியை சத்திரசிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றி மருத்துவர்கள் சாதனை
நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டின் காரணமாக புற்றுநோய் கட்டி ஒன்றை மருத்துவர்கள் சத்திரை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.. இச்சம்பவம் தெல்தெனிய மருத்துவமனையில் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது…. கீமோதெரபி கதிர்வீச்சு மருந்துகள் மூலம் அகற்றவேண்டிய கட்டியை சத்திரசிகிச்சை மூலம் அகற்றியது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது…
சத்திரசிகிச்சை நிபுணர் கோசல சோமரட்ண தலைமையில் புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டுள்ளது. மேலும் அவர் தெரிவிக்கையில் லபரஸ்கோபி சாதனம் இல்லாத நிலையில் உணவுக்குழாய் வழியாக என்டோஸ்கோபி கருவியை பயன்படுத்தி புற்றுநோய் இருப்பது கண்டறிந்தோம்.. கருவிகள் மருந்துகள் இல்லாத நிலையில் உலகத்தில் நாங்கள் மாத்திரமே இவ்வாறான சிகிச்சையை அளித்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்..