இலங்கை

பெருமளவு ஆயுதங்களுடன் இலங்கை வந்த விமானங்கள்!

பெப்ரவரி 14ஆம் திகதி அமெரிக்க வான்படைக்குச் சொந்தமான சீ – 17 குளோப் மாஸ்டர் ரக இரு விமானங்கள் 29 அமெரிக்க உயர் அதிகாரிகளுடன், பெருமளவு ஆயுதங்கள் மற்றும் பலவிதமான படைத்துறை உபகரணங்களுடன் இலங்கையில் தரையிறங்கியது. அமெரிக்க படைத்துறை அதிகாரிகள் பலத்த பாதுகாப்புடன் இந்தியாவுக்கு தெரியாமல் இலங்கையில் தரையிறங்கிய விடயம் இந்தியாவுக்கு ஆபத்தாக மாறியிருக்கிறது. ஆனால், அந்த ஆயுதங்கள் இலங்கையில் இறக்கப்பட்டனவா என்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் விமானத்தில் இலங்கை வந்திருந்த உயர் மட்ட பிரமுகர்களுள் அமெரிக்காவின் உளவு நிறுவனமான சிஐஏ யின் தலைவர் வில்லியம் பேன்ஸ் மற்றும் இந்தோ – பசுபிக் இராணுவ செயற்பாடுகளின் கொள்கை வகுப்பு அதிகாரியான ஹெனடியா றோயல் ஆகியோரும் உள்ளடங்குவர். அமெரிக்க விமானப்படையின் வான்கலங்களில் பலத்த பாதுகாப்புடன் ரகசியமாக அவர்கள் இலங்கைக்குள் நுழைந்ததன் பின்னணியில் ஏதோ மிகப் பெரிய நகர்வு ஒன்று இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகளின் இலங்கை வருகை பற்றியோ, அவர்கள் இலங்கையில் மேற்கொண்ட சந்திப்புகளின் விபரமும் இந்தியாவுக்கு வழங்கப்படவில்லை என்கின்ற செய்தி தான் இந்த விவகாரத்தில் அதிகம் பரபரப்புக்கு உள்ளாகி வருகின்ற ஒன்றாக இருக்கிறது. மேலும் அமெரிக்க அதிகாரிகளின் வருகை பற்றிய தகவல்களை சேகரிப்பதில் இந்திய தூதரக அதிகாரிகள் வெளிப்படுத்திய ஆர்வத்தை பார்க்கின்ற போது இந்தியாவுக்குத் தெரியாமல் அமெரிக்க அதிகாரிகளின் இலங்கை வருகை இருந்துள்ளதான சந்தேகம் வெளிப்பட்டுள்ளது.

Back to top button