இலங்கை

பேருந்து விபத்தில் 10 பேர் படுகாயம்

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில், வென்னப்புவ நைனாமடம் கிங்கோயா பாலத்துக்கு அருகில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியதில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் இன்று (20.04.2023) பதிவாகியுள்ளது.

குறித்த பேருந்தானது பாலத்தின் பக்கவாட்டு வேலியில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சீமெந்து கலவை ஏற்றிச் சென்ற லொறியும் குறித்த பேருந்து மீது பின்புறத்தில் மோதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விபத்து சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Back to top button