இலங்கை

மகிந்த ராஜபக்சக்கு மீண்டும் பிரதமர் பதவி

அரசாங்கத்தின் உயர் பதவி அண்மையில் ராஜபக்சவின் சகோதரியின் இல்லத்தில் நடைபெற்ற இரவு விருந்தின் போது நடைபெற்ற கலந்துரையாடலில், மகிந்த ராஜபக்சவை மீண்டும் அரசாங்கத்தின் உயர் பதவிக்கு நியமிக்கப்படுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக சிங்கள செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது. எதிர்வரும் மாதங்களில் மகிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட அவரின் ஆதரவாளர்கள் அழுத்தங்களை கொடுத்து வருவதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் பதவியில் மாற்றங்களைச் செய்வதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை என பிரதமர் தினேஸ் குணவர்தன ஏற்கனவே தெரிவித்துள்ளார். எனினும் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் உட்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குழுவொன்று மகிந்தவை மீண்டும் பிரதமராக நியமிக்க வலியுறுத்தி வருகின்றனர். இவ்வாறானதொரு பின்னணியிலேயே இன்று (12.03.2023) மொனராகலையில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்ட பேரணியில் மகிந்த ராஜபக்ச கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏதிர்வரும் மாதங்களில் மகிந்த ராஜபக்சக்கு மீண்டும் பிரதமர் பதவி | Pressure To Reappoint Mahinda As Prime Minister நாடாளுமன்ற உறுப்பினர் சசீந்திர ராஜபசவினால் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்சியின் மீளெழுச்சிக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் திட்டமிடப்பட்டுள்ள முக்கிய மாவட்ட பேரணிகளில் மொனராகலை பேரணியும் ஒன்றாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button