இலங்கை

முட்டை விலை தொடர்பில் மகிழ்ச்சி தகவல்

அடுத்த வாரத்தின் பின்னர் முட்டையின் விலை குறைவடையும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பெரிய அளவில் முட்டை சம்பந்தப்பட்ட உற்பத்தியாளர்கள் முட்டைகளை கையிருப்பில் வைத்திருப்பதால், தற்போது சந்தையில் முட்டை தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் முட்டை உற்பத்தியாளர்களிடம் இருந்து முட்டைகளை வாங்கி சேமித்து வைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அந்த முட்டைகளை கிட்டத்தட்ட ஒரு வருடம் குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம் என்றும் ஒரு முட்டையை 72 மணி நேரம் வெளியில் வைக்கலாம் என்றும் கூறினார். மேலும் சந்தையில் தற்போது ஒரு முட்டை 55 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விற்கப்படுவதாகவும் மார்ச் 25ம் திகதிக்கு பிறகு ஒரு முட்டை சந்தையில் 50 ரூபாய்க்கும் குறைவாகவே கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

Back to top button