ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: புனர்பூசம், பூசம், ஆயில்யம்..யாருடைய வாழ்க்கையில் திடீர் திருப்புமுனை

நிழல் கிரகங்களான ராகு – கேது பெயர்ச்சி 2023ம் ஆண்டு திருகணித பஞ்சாங்கம் படி, அக்டோபர் 30ல் நடக்க உள்ளது. அசுப கிரகங்களாக இருந்தாலும், அதன் அமைப்பு சில ராசியினருக்கு மிகவும் யோக பலனைத் தருவதாக இருக்கும்.
ராகு மற்றும் கேது கிரகங்கள் ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் சஞ்சரித்து அதற்கான பலன்களைத் தரக்கூடியவர்கள். இந்த கிரகங்களோடு சேர்க்கக்கூடிய மற்ற கிரகங்களைப் பொருத்தும் அதற்கான பலன்கள் சிறியளவில் மாறுபடும். எப்போதும் ராகு, கேது மற்ற கிரகங்களின் பலத்தை தனதாக்கிக் கொண்டு பலன் தரக்கூடியவை. அந்த வகையில் சில ராசியினருக்கு பெரியளவில் முன்னேற்றமும், அதிர்ஷ்ட பலனும் கிடைக்கும்.
ராகு மற்றும் கேது பெயர்ச்சி 2023 ஆம் ஆண்டு வாக்கிய பஞ்சாங்கத்தின்படி அக்டோபர் மாதம் 8ம் தேதியும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி அக்டோபர் 30 ஆம் தேதி நடக்க உள்ளது என ஜோதிடர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த பெயர்ச்சியின் போது ராகு மீன ராசிக்கும், கேது கன்னி ராசிக்கும் பெயர்ச்சி ஆகின்றனர். திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 2025ம் ஆண்டு மே 18ம் தேதி இரவு 7.35 மணி வரை இந்த கிரகங்கள் மேலே குறிப்பிட்டுள்ள ராசியில் சஞ்சரிக்கும்.
மற்ற கிரகங்களைப் போல் இல்லாமல் எப்போதும் பின்னோக்கி அதாவது வக்ர நிலையில் பயணிக்கக்கூடியன இந்த சர்ப்ப கிரகங்கள். தனக்கென ஒரு தனி ராசியோ, காரகத்துவமோ கொண்டதல்ல. அந்த கிரகம் எந்த ராசியில் அமர்கிறதோ அந்த ராசிநாதனின் காரகத்துவம் அல்லது அங்கு என்ன கிரகம் பெயர்ச்சி ஆகி சஞ்சாரம் செய்கிறதோ அதன் காரகத்துவத்தை பெற்று பலனைத் தருவார்கள். இனி ராகு கேது பெயர்ச்சியால் எந்த ராசியினர் கவனமாக இருக்க வேண்டும் என்பதை பார்ப்போம் வாருங்கள்…
சிம்மம் : இதுவரை ராகு ராசிக்கு 9ம் இடத்திலும், கேது 3ம் இடத்திலும் சஞ்சரித்து வந்தனர். தற்போது இந்த பெயர்ச்சி மூலம் ராகு 8ம் இடத்திற்கும், கேது 2ம் இடத்தில் அமர்கின்றனர்.
இதன் காரணமாக பொதுவாக உங்களுக்கு கடன் தொல்லை அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் பிரச்னையும், சரியாக தூக்கம் வராத நிலை ஏற்படும்.
அஷ்டம ஸ்தானத்தில் ராகு அமர்வதோடு, ராசிக்கு 2ல் தன ஸ்தானத்தில் கேது இருப்பதால் உங்களின் வருவாய் பாதிக்கப்படும். அதனால் வருமானம் குறைவதற்கும், கடன் தொல்லை அதிகரிக்கவும் வாய்ப்பு உண்டு. தேவையற்ற சிந்தனைகள், மன குழப்பங்களால் தூக்கமின்மை ஏற்படும்.
எனவே எந்த விஷயத்தையும், செலவையும் திட்டமிட்டு செய்வது நல்லது. குறிப்பாக உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். நொறுக்குத் தீனிகளைத் தவிர்ப்பது அவசியம்.
கன்னி : இந்த ராகு கேது பெயர்ச்சியினால் கன்னி ராசியிலேயே கேது பகவான் அமர்வதும், 7ம் இடத்தில் ராகு அமர உள்ளார்.
லக்கினத்தில் கேதுவும், 7ல் ராகு அமர்வதால் திருமண வாழ்க்கையில் கஷ்டம் ஏற்படும். திருமண முயற்சியில் இருப்பவர்களுக்கு திருமண தடை உருவாகும். மேலும் கன்னி ராசியினரின் வளர்ச்சி தடைப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. நீங்கள் எடுக்கும் முடிவு, செயல்களில் உங்களின் சிந்தனை நிலையாக இருக்காது என்பதால் தடுமாற்றம் அதிகரிக்கும்.
கும்பம் : கும்ப ராசிக்காரர்களுக்கு 2ம் இடத்தில் ராகுவும், 8ல் கேதுவும் இந்த பெயர்ச்சியின் போது அமையப் பெறுவார்கள்.
இரண்டாம் இடத்தில் ராகு, 8ல் கேது அமர்வதால் உங்களின் குடும்ப வாழ்க்கையில் நிம்மதி இருக்காது. மேலும் தற்போது ஜென்ம சனி நடந்து கொண்டிருப்பதால் கூடுதல் கவனத்துடன் இருக்கவும். மேலும் குடும்ப விருத்தி அடைவதில் பிரச்னைகள் உண்டாகும்.
இந்த காலத்தில் கணவன் அல்லது மனைவிக்கு ஆபத்து ஏற்படலாம். மதிப்பு குறையலாம். நிம்மதியற்ற வாழ்க்கை வாழ வேண்டியது இருக்கும்.
மீனம்: மீன ராசியிலேயே ராகு வருவதும், கேது 7ம் இடத்தில் அமர்வதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலமாக இருக்கும். திருமண முயற்சியில் இருப்பவர்களுக்கு கால தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. புத்திர தோஷம், சொத்து தகராறு போன்ற விஷயங்கள் ஏற்படும்.
திருமண வாழ்க்கையில் ஏதேனும் ஒரு குறை அல்லது பிரச்னைகள் வந்து கொண்டே இருக்கும். சில சஞ்சலங்களால் அன்பு குறையும். எதிர்மறையான எண்ணங்களைத் தவிர்த்து, குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து நடப்பது அவசியம்.