இலங்கை

ரூபாயின் பெறுமதி வீழ்ச்சிக்கான காரணம்!

இலங்கையில் சுமார் 10 நாட்களாக அதிகரித்த அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி மீண்டும் வலுவிழக்கத் தொடங்கியதற்கான காரணம் வெளியாகியுள்ளது. கடந்த நாட்களாக டுபாய் சந்தையில் தங்கத்தின் விலை திடீரென குறைந்ததன் காரணமாக இலங்கையில் உள்ள வர்த்தகர்கள் அதிகப்படியான டொலர்களை டுபாய் தங்கத்தை கொள்வனவு செய்ய பயன்படுத்தியமையே அதற்கு காரணம் என கொழும்பு பரிவர்த்தனை சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த காலங்களில் டொலருக்கான தேவை குறைந்ததன் காரணமாக சந்தையில் மாதாந்த டொலர்களின் இருப்பு 300 மில்லியன் டொலர்களை நெருங்கியிருந்தன. நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததால் டொலருக்கான தேவை குறைந்து காணப்பட்டிருந்தது. ஆனால் டுபாய் சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததாலும், தங்கத்தை இலங்கைக்கு கொண்டு வந்து இந்திய சந்தையில் அதிக விலைக்கு விற்கும் வாய்ப்பு ஏற்பட்டதாலும் திடீரென டொலருக்கு மீண்டும் அதிக தேவை உருவானது. இதனால் டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரியத் தொடங்கியுள்ளதாக பரிவர்த்தனை சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Back to top button