இலங்கை

வடமாகாண ஆளுநரிற்கு ஜனாதிபதி வழங்கிய மேலதிக அதிகாரங்கள்

வட மாகாண அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு இணை தலைவராக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். வட மாகாணத்தில் புதிய நியமனங்கள் ஏற்கனவே வட மாகாணத்தில் உள்ள மன்னார், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக அமைச்சர் காதர் மஸ்தானும் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் வவுனியா மாவட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் திலீபனும் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் வடக்கு மாகாணத்தில் உள்ள மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்களை ஒருங்கிணைக்கும் வகையில் இணைத் தலைவராக வடக்கு ஆளுநர் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Back to top button