வழியில் கிடைத்த பணத்தை எடுப்பது நல்லதா? – சாஸ்திரம் என்ன சொல்கிறது?
பொருளடக்கம்
வழியில் நடந்து செல்லும் போது எதிர்பாராதவிதமாக பணம் கிடைத்தால், நம் மனதில் பல கேள்விகள் எழும். அந்த பணத்தை எடுக்கலாமா? வேண்டாமா? அப்படி எடுத்தால் என்ன நடக்கும்? இது போன்ற கேள்விகளுக்கு பல நூற்றாண்டுகளாக மக்கள் தேடி வருகின்றனர்.
சாஸ்திரம் என்ன சொல்கிறது?
சாஸ்திரத்தின் பார்வையில், வழியில் கிடைத்த பணத்தை எடுப்பது குறித்து வெவ்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. சில சாஸ்திரங்கள் இதை நல்லதாகக் கருதுகின்றன. ஏனெனில், இது ஒரு அதிர்ஷ்டமாகக் கருதப்படுகிறது. இது உங்களுக்கு வரும் புதிய தொடக்கத்தின் அறிகுறியாக இருக்கலாம்.
1. சாலையில் விழுந்த ரூபாய் மற்றும் நாணயங்களை எடுப்பது மங்களகரமானது என கூறப்படுகின்றது. அத்துடன் இப்படி நடப்பது முன்னோர்களின் ஆசீர்வாதமாக பார்க்கப்படுகின்றது. தற்போது மகாளய பட்சம் நடக்கிறது, இதனால் சாலையில் பணத்தை பார்த்தால் முன்னோர்களின் நேரடி ஆசீர்வாதம் கிடைக்கும் என சாஸ்த்திரம் கூறுகின்றது.
2. சாலையில் செல்லும் போது நாணயம் கிடந்தால் அப்போது உங்களுக்கு நல்ல நேரம் ஆரம்பமாகின்றது என்று அர்த்தம். உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கப் போகின்றது என்பதனை உணர்த்துவதற்காகவே இப்படியான அறிகுறிகள் காட்டும் என சாஸ்த்திரம் கூறுகின்றது. இவ்வாறு பணத்தை கண்டால் உங்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
3. சில சமயங்களில் நாம் எதிர்பாராத நேரத்தில் சாலையில் பணம் ரூபாய் நோட்டுகள் அல்லது நாணயங்கள் கிடக்கும். இவ்வாறு கிடப்பது உங்களுக்கு விரைவில் நல்ல செய்தி வரும் என்பதனை இறைவன் உணர்த்துகிறார் என்று அர்த்தம்.
4. கத்தையாக அல்லது பர்ஸ் நிறைய பணம் உங்கள் கைகளுக்கு கிடைத்தால் அது உங்களுக்கு உங்களுடைய பூர்வீக சொத்தை பெற்று தரும் என்று பொருட்படுகின்றது. இவ்வாறு கிடைத்த பணம் உங்களுடைய இல்லாவிட்டால் உரியவரிடம் கொடுத்து விடுங்கள். இதனால் உங்களுக்கு பெரிய அதிர்ஷ்டம் வீடு தேடி வரும்.
5. திடீரென்று கீழே பார்க்கும் போது பணம் கிடந்தால் அது உங்களுக்கு நேர்மறையான ஆற்றல்களை கொண்டு வரும் என்று அர்த்தம். சிக்கல்களில் போராடிக் கொண்டிருக்கும் பொழுது கடவுள் இப்படியான சில அறிகுறிகளை உங்களுக்கு காட்டுவார். அத்துடன் நல்ல காரியங்களை எதிர் பார்த்து காத்திருப்பவர்களுக்கு இது சிறந்த வருங்காலமாகவும் இருக்கும்.
6. வழியில் பணத்தை பார்ப்பது ஒரு நல்ல சகுனம் என்றாலும் வீண் செலவு செய்யாமல் வைத்திருந்து உரிய நபரிடம் சேர்ப்பது அறமாக பார்க்கப்படுகின்றது. இதனை செய்தால் கடவுள் நிச்சயம் உங்களுக்கு நல்லதொரு வரவை கொடுப்பார்.
புதிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
எங்களுடைய Android App தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
எங்களுடைய Apple store இல் செயலியை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
மேலும் WhatsApp சேனல் மூலம் தகவல்களை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.