வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் தொடர்பில் ஜனாதிபதி அதிரடி உத்தரவு!
வவுனியா – வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் விசமிகளால் ஏற்படுத்தப்பட்ட சேதம் குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் ஜனாதிபதி இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், தொல்பொருள் திணைக்களத்துடன் வவுனியாவிலும், கொழும்பிலும் இரண்டு சந்திப்புக்கள் நடத்தப்பட்டுள்ளன. எனினும், இன்னும் அந்த பிரச்சினை தொடர்கிறது. வனபாதுகாப்பு திணைக்களத்துடனும் இவ்வாறான பிரச்சினைகள் உள்ளன. அவ்வாறான பிரச்சினைகள் வடக்கில் மாத்திரமன்றி வடமத்திய மாகாணத்திலும் மொனராகலை மாவட்டத்திலும் உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாசகாரவேலை வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் பி்ரதிஸ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் களற்றி வீசப்பட்டுள்ளதுடன், ஏனைய விக்கிரகங்களும் மாயமாகியுள்ளமை பெரும் அதிர்வலைகள் ஏற்ப்படுத்தி இருந்தது. அதோடு ஆதி சிவன் ஆலயத்தில் இடம்பெற்ற இந்த நாசகாரவேலைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.