இலங்கை
வெதுப்பக உற்பத்தி விலைகளை தீர்மானிக்கும் விடயத்தில் நுகர்வோர் விவகார அதிகார சபை தலையீடு செய்ய வேண்டும்!
பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகள், சீமெந்து மற்றும் பால்மா ஆகியவற்றின் விலைகளை தீர்மானிக்கும் விடயத்தில், எதிர்காலத்தில் நுகர்வோர் விவகார அதிகார சபை தலையீடு செய்ய வேண்டி ஏற்படும் என அதன் தலைவர் சட்டத்தரணி சாந்த நிரிஎல்ல தெரிவித்துள்ளார். குறித்த தொழிற்துறையை சார்ந்தவர்கள், அவற்றின் விலைகளை குறைக்காமையே இதற்கு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இணையத்தள முறைமையில் பொருட்களைக் கொள்வனவு செய்வது தொடர்பில் எதிர்காலத்தில் புதிய ஒழுங்கு விதிகளை அமுலாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தற்போது அந்தப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி சாந்த நிரிஎல்ல கூறியுள்ளார்.