இலங்கை
கொழும்பை நாளைய தினம் முற்றுகையிடப் போகும் 10 ஆயிரம் பேர் : மீண்டும் ஒரு மக்கள் போராட்டம்
கொழும்பில் நாளைய தினம் 10ஆயிரம் பேர் ஒன்று திரண்டு போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சாரசபை அலுவலகத்திற்கு முன்பாக கடந்த இரண்டு நாட்களாக ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்ததொடர் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த போராட்டம் நாளைய தினமும்(05) தொடரவுள்ள நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக 10ஆயிரம் பேர் நாளை கொழும்பில் ஒன்று திரண்டு போராட்டத்தினை நடத்தவுள்ளதாக இன்றைய(04) ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.