லண்டன்

ஹமாஸ் படைகளால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனியர்களுக்கு 101.4 கோடி நிதியுதவி: பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அறிவிப்பு!

இஸ்ரேல் ஹமாஸ் போரில் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனர்களுக்கு சுமார் 101.4 கோடி ரூபாய் நிதியுதவியை பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். இஸ்ரேல்-ஹமாஸ் படைகளுக்கு இடையே போரானது 10வது நாளாக நீடித்து வருகிறது. இதில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய ராக்கெட் தாக்குதலில் இதுவரை பாலஸ்தீனியர்கள் 2,215 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 8,714 படுகாயமடைந்துள்ளனர். இதைப்போல ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதலில், இதுவரை 1300 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 3,400 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் பெரும்பாலான கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் முற்றிலும் சிதைக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீனத்தின் காசா நகர் முழுவதும், இஸ்ரேலிய ராக்கெட்டுகளால் அழிக்கப்பட்டத்தை தொடர்ந்து, பல்வேறு நாடுகளுக்கு பாலஸ்தீன மக்களுக்கு நிதியுதவியை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாலஸ்தீனியர்களுக்கு ஆபத்தில் உதவுவதற்காக 10 மில்லியன் டொலர் தொகையை பிரித்தானியா வழங்க இருப்பதாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பிரதமர் ரிஷி சுனக் வெளியிட்டுள்ள கருத்தில், ஹமாஸ் அமைப்பினர் பாலஸ்தீன மக்களையோ அல்லது அவர்கள் விரும்பும் எதிர்காலத்தையோ பிரதிபலிக்கவில்லை. ஹமாஸ் அமைப்பினரால் பெரும்பாலான பாலஸ்தீனியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இன்று கூடுதலான 10 மில்லியன் டொலர் ஆதரவுடன் பாலஸ்தீனிய மக்களுக்கான பிரித்தானியாவின் உதவியை மூன்றில் ஒரு பங்காக அதிகரிப்பதாக அறிவிக்கிறேன் என ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

Back to top button