இலங்கை
நாளைய தினம் 12 மணி நேர நீர் விநியோகத் தடை
எதிர்வரும் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, சப்புகஸ்கந்த மின்சார சபையின் அவசர திருத்த வேலைகள் காரணமாக, பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கான மின் விநியோகம் தடை செய்யப்படுவதால் மு.ப. 8:30 முதல் பி.ப. 8:30 வரையிலான 12 மணி நேர நீர் விநியோகத்தடை செய்யப்படவுள்ளது.
இப்பின்வரும் பகுதிகளில் அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. பேலியகொட, வத்தளை, ஜா–எல, கட்டுநாயக்க – சீதுவ நகரசபை பகுதிகள், களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா–எல, கட்டானை, மினுவாங்கொடை ஆகிய பிரதேச சபை பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபை எல்லைக்குட்பட்ட சில பகுதிகள் நீர் விநியோகத் தடையினால் பாதிக்கப்படும். இதுபற்றிய மேலதிக விபரங்களுக்கு 1939 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும்.