ஏனையவை
நாட்டை விட்டு 1500 மருத்துவர்கள் வெளியேற்றம்

கடந்த ஆண்டு முதல் இதுவரையில் சுமார் 1500 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமல் விஜேசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மேலும் வெளிநாடு செல்வதற்கு தேவையான அடிப்படை தகமைகளை பூர்த்தி செய்த சுமார் 5000 மருத்துவர்கள் நாட்டில் உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் சிறிய மருத்துவ மனைகள் 40இற்கும் மேற்பட்டவை மூடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடி நிலைமைகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.