2 முறை நிகழும் சுக்கிர பெயர்ச்சி: அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசியினர் இவர்கள் தான்
ஜோதிட சாஸ்திரத்திரத்தை பொருத்த வரையில் சுக்கிரனுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.
சொத்து, செல்வம் மற்றும் அழகு ஆடம்பரத்தின் சின்னமாகவே சுக்கிரன் பகவான் பார்க்கப்படுகின்றார்.
பொதுவாகவே கிரகங்களின் பெயர்ச்சி 12 ராசிகளிலும் தாக்கம் செலுத்தும் அந்த வகையில் ஒருவருடைய ராசியில் சுக்கிரன் வலுவான இடத்தில் இருந்தால் இவருக்கு செல்வ செழிப்புக்கு பஞ்சமே இருக்காது.
மார்ச் மாதத்தில் சுக்கிரன் 2 முறை கிரக பெயர்ச்சி அடைய போகின்றார். மார்ச் 7ஆம் திகதி கும்ப ராசியில் முதல் பெயர்ச்சி.
மார்ச் 31 ஆம் திகதி மீன ராசியில் இரண்டாவது பெயர்ச்சி அடைய போகின்றார். இந்த கிரக பெயர்ச்சியால் பலனடைய போகும் ராசியினர் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியினருக்கு இந்த இரண்டு பெயர்ச்சிகளும் நன்மை பயக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத பண வரவுகள் கிடைக்கும்.
வெளிநாட்டில் வியாபாரம் செய்யக்கூடிய வாய்ப்புக்கள் அமையும்.வாழ்வில் எடுக்க வேண்டிய முக்கிய முடிவுகளை இந்த காலப்பகுதியில் எடுப்பது நன்மை பயக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு மார்ச் மாதம் அனுகூலமான விடயங்கள் நடக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் மற்றும் பதிவி உயர்வு கிடைக்கும்.
பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டு. பணியிடத்தில் மூத்த அதிகாரிகளுடன் நல்லுறவை ஏற்படுத்திக்கொள்ளும் வாய்ப்புக்கள் அமையும்.
பொருளாதாரத்தில் மாற்றம் ஏற்படும் சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றது. உடல் மற்றும் உள ஆரோக்கியம் மேம்படும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதத்தில் வரும் சுக்கிரன் பெயர்ச்சி இரண்டும் நன்மை தரும்.
பணித் துறையில் உங்கள் பணி பாராட்டப்படும். பதவி – கௌரவமும் மரியாதையும் அதிகரிக்கும். முதலீடு மூலம் லாபம் உண்டாகும்.
தனுசு
தனுசு ராசியினருக்கு இந்த மாதம் சிறப்பாக இருக்கும். சுக்கிரனின் சிறப்பு ஆசிகள் கிடைக்கும்
நோய்களில் இருந்து விடுபடுவீர்கள். பொருள் வசதிகளின் அதிகரிக்கும் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
கன்னி
கன்னி ராசியினருக்கு சுக்கிரனின் 2 சஞ்சாரங்களும் சாதகமான பலனை கொடுக்கும். பண வரவு சிறப்பாக இருக்கும்.
வேலை சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல வாய்ப்புகள் அமையும். தொழில் சம்பந்தமாக அனுகூலமான விடயங்கள் நடக்கும்.