இலங்கை
வெளியானது 2023 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள்!

இம்முறை நடைபெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk இல் பெறுபேறுகளை பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் இம்முறை ஒக்டோபர் 15 ஆம் திகதி நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையானது 2,888 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றதுடன், மொத்தமாக 337,956 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக இந்த பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியாகும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளிகள் கீழ்வரும் அட்டவணையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
