ஆன்மிகம்

2024 புத்தாண்டு பலன் அதிர்ஷ்டம் யாருக்கு? : குரு, சனி, ராகுவின் அமைப்பு இந்த ராசிக்காரர்களுக்கு கஜானா நிரம்பும்

2024ம் ஆண்டு சுபத்தை அளிக்கக்கூடிய குருவின் மாற்றம் மட்டும் நடக்க உள்ளது. குரு ரிஷப ராசிக்கு மாறும் நிலையில், சனி கும்பத்திலும், ராகு மீனத்திலும் இருக்கும் அமைப்பு எப்படி அதிர்ஷ்டத்தை தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.

2024 கிரக அமைப்பு

2023 டிசம்பர் 31 அன்று குரு மேஷ ராசியில் வக்ர நிவர்த்தி அடைகிறார். மே 1ம் தேதி மேஷத்திலிருந்து ரிஷப ராசிக்கு மாறுகிறார்.

சனி: 2024ம் ஆண்டு முழுவதும் சனி பகவான் கும்ப ராசியில் ஆட்சி, அதிபதியாக சஞ்சரிக்க உள்ளார்.

ராகு கேது: அதே போல ராகு மீன ராசியிலும், கேது கன்னி ராசியிலும் 2024 ஆண்டு முழுவதும் சஞ்சரிக்க உள்ளனர்.

கிரக அமைப்பால் ராசிகளுக்கு ஏற்படும் பலன்கள்

மேஷம்

2024ம் ஆண்டு மே 1ம் தேதி மேஷ ராசிக்கு ஜென்மத்திலேயே இருக்கும் குரு பகவான், அதன் பின்னர் 2ம் இடமான தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

  • குருவின் இந்த அமைப்பானது உங்களுக்கு நிதி நிலையில் முன்னேற்றத்தையும், அதற்காக புதிய வாய்ப்புகளைக் கொண்டு வருவார்.
  • சமூகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும்.
  • பொருளாதார நிலையில் நீங்கள் எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
  • நீங்கள் மேற்கொள்ளும் வேலையில் வெற்றி பெறுவீர்கள்.

கடகம்

கடக ராசியினருக்கு அஷ்டம சனி நடந்தாலும், குரு பகவான் கர்ம ஸ்தானத்திலிருந்து 11ம் வீடான லாப ஸ்தானத்தில் மாறுவது பல விதத்தில் நன்மைகளை பெற்றுத் தருவதாக இருக்கும்.

  • கிரகங்களின் அமைப்பால் 2024ம் ஆண்டில் உங்களுக்கு வருமானம் அதிகரிப்பதற்கான பல வாய்ப்புகள் கிடைக்கும்.
  • மகிழ்ச்சியும், மரியாதையும் அதிகரிக்கும்.
  • உங்களின் வேலையில் பல அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும்.
  • உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கும்.
  • திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும், ஆதரவும் கிடைக்கும்.

விருச்சிக ராசி

விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2024-ம் ஆண்டு வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தரக்கூடியதாக இருக்கும்.

  • குறிப்பாக குரு பகவான் 6ம் வீட்டிலிருந்து 7ம் இடத்திற்கு மாறி அவரின் பார்வை கிடைப்பதும், சனி பகவான் 4ம் இடத்தில் அமர்வதும் நல்ல பலன்கள் கிடைப்பதாக இருக்கும்.
  • உங்கள் தொழிலில் நல்ல வெற்றியை பெற்றிடலாம்.
  • மேலும் உங்களின் மரியாதை கூடும்.
  • வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல சலுகைகள், பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
  • பொருளாதார நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும்.

கும்ப ராசி

கும்ப ராசியினருக்கு 2024 ஆம் ஆண்டில் கும்ப ராசியிலேயே சனி பகவான் ஆட்சி பெற்று சஞ்சரிப்பார். ராகு 2ம் இடத்திலும், 4ல் குருவின் மாற்றமும் நடக்க உள்ளது.

  • உங்களுக்கு வேலையில் வெற்றியும், பல விதத்தில் நன்மைகளும் கிடைக்கும்.
  • வியாபாரத்தில் நல்ல லாபத்தை அடைந்திடலாம்.
  • அதிர்ஷ்டம் உங்களை முழுமையாக ஆதரிக்கும்.
  • நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் இருக்கும்.
  • போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் வெற்றியும், நலல் வேலையும் கிடைக்கும்.

குறிப்புகள்

  • இந்த கிரக அமைப்பு என்பது பொதுவான பலன்கள் ஆகும். ஒவ்வொருவரின் ஜாதக அமைப்பைப் பொறுத்து பலன்கள் மாறுபடும்.
  • ஜோதிடரின் ஆலோசனை பெற்று உங்கள் வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்ளுங்கள்.

Back to top button