2024 சனி பெயர்ச்சி பலன்கள் ஆரம்பம்… பாதிப்பை சந்திக்கும் ராசிகள்! பரிகாரம் தான் என்ன?
சனிப்பெயர்ச்சி 2024 முதல் 2026 வரை துலாம் ராசியிலிருந்து மீனம் ராசி வரை உள்ளவர்களுக்கு பலன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். சனி பகவான் வாக்கிய பஞ்சானங்கப்படி, இன்று டிசம்பர் 23, 2023 – மார்கழி 4 மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார். 2026 மார்ச் 6 வரை சனி பகவான் கும்ப ராசியில் தங்கியிருக்கும் நிலையில் எந்தெந்த ராசியினருக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
துலாம் :
சுக்கிரனை ராசிநாதனாக கொண்ட துலாம் ராசிக்காரர்கள், இந்த சனி பெயர்ச்சியில் இதுவரை இருந்த கடினமான சூழல் மற்றும் தொல்லைகளிலிருந்து விடுபடுவீர்கள்.
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நிலையில், உயர் பதவிகளும் உங்களைத் தேடி வரும். ஆனால் சக ஊழியர்கள் மீது பொறாமை ஏற்படலாம். வியாபாரிகள் பொருளாதார வளர்ச்சியினைக் கண்டாலும், கொடுக்கல் வாங்கலில் சில சிரமங்கள் ஏற்படும்.
கலைத்துறையினர் புகழை தக்க வைக்க கடும் முயற்சியினை எடுக்க வேண்டும். குலதெய்வ வழியாடு இன்னும் சிறந்த பலனை கொடுக்கும்.
விருச்சிகம்
செவ்வாய் கிரகத்தை ராசி நாயகனாக கொண்ட விருச்சிக ராசியினருக்கு இந்த சனி பெயர்ச்சியால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். இக்காலம் அர்த்தாஷ்டம சனி காலம் ஆகும்.
சனி பகவான் 4-ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால் பாதிப்புகள் இல்லாமல் இருப்பதுடன், உங்கள் ஆசை, குறிக்கோள்களை நிறைவேற்றுவதுடன், பண வரவும், தன வரவும் அதிகரிக்கும்.
பொருளாதார நிலை உயர்வதுடன், வேலைகளில் மேலதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். கலைஞர்கள் சக கலைஞர்களிடம் ரகசியங்களை சொல்ல வேண்டும்.
செவ்வாய் கிழமைகளில் துர்க்கை அம்மனை வழிபட எதிர்ப்புகள் விலகி தைரியம் கூடும்.
தனுசு :
குரு பகவானை ராசி நாதனாக கொண்டிருக்கும் தனுசு ராயினருக்கு இந்த சனி பெயர்ச்சியால் படிப்படியான முன்னேற்றம் ஏற்படும். ஏழரை ஆண்டுகளாக ஆட்டிப்படைத்த ஏழரை சனி விலகுவதால், இனி பொன்னான காலமாக அமையும். துன்பங்கள் நீங்கி சுப நிகழ்ச்சிகள் நடப்பதுடன், கொடுத்த கடனும், பதவிகளும் வீடு தேடி வரும். முழுமையான ராஜயோகத்தால் புகழின் உச்சத்திற்கு செல்வீர்கள்.
சனி பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுவது கஷ்டங்களைப் போக்கும்.
மகரம்
சனி பகவானை ராசி நாதனாக கொண்ட மகர ராசியினருக்கு இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் உடல் சோர்வு அதிகரிப்பதுடன், வருமானம் சீராகவே இருக்கும்.
நண்பர்களைப் போன்று பழகுபவர்கள் எதிரிகளாகவும் மாறுவார்கள். பேராசைக்கு இடம் கொடுக்க வேண்டாம். உடனடியாக யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள். ஆனால் கடன் ஏற்படாது.
மேலதிகாரிகள் சற்று பாராமகமாக நடந்து கொண்டாலும், தொல்லைகள் கொடுக்க மாட்டார்கள். இல்லத்தில் மகிழ்ச்சி பொங்குவதுடன், மாணவர்கள் நல்ல மதிப்பெண்களையும் பெறுவார்கள். ஆஞ்சநேயரை வணங்கி வர வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.
கும்பம்
கும்ப ராசியினரும் சனி பகவானை ராசி நாதனாக கொண்டிருக்கும் நிலையில், இந்த சனிப்பெயர்ச்சி ஜென்ம சனியாக அமையும் என்றாலும், எந்த பாதிப்பும் ஏற்படாது.
பண பற்றாக்குரை ஏற்படுவதுடன், உடல் நலத்திலும் கவனம் செலுத்த வேண்டும். மனக்குழப்பங்கள் ஏமாற்றங்கள் வரலாம். பொல்லாப்பு நினைப்பவர்களிடம் விலகி இருக்கவும். துன்பங்களை சந்திக்கவும் வாய்ப்புள்ளது.
பணியில் இருப்பவர்கள், வியாபாரிகள், அரசியல்வாதிகள் எந்தவொரு பிரச்சினையும் இல்லை. விநாயக பெருமானை வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும்.
மீனம்
குரு பகவானை ராசி நாதனாக கொண்ட மீன ராசியினருக்கு இந்த சனிப்பெயர்ச்சி நன்மையையே அளிக்கின்றது. விலகியிருந்த தாய் வழி உறவுகள் மீண்டும் இணைவார்கள்.
அதிக பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ள நிலையில், பதவி உயர்வும் கிடைக்கும். வியாபாரிகள் கூட்டாளிகளை நம்ப வேண்டாம். பெண்கள் குடும்பத்தினரிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். முருகனை வணங்க எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.