2046 ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று பைசா சாய்ந்த கோபுரத்தின் அளவுள்ள நகரத்தை அழிக்கும் சிறுகோள் பூமியைத் தாக்கக்கூடும் என்று நாசா எச்சரித்துள்ளது. அந்த சிறுகோள் பூமியில் எங்கு விழும் என்பது இன்னும் தெரியவில்லை. 2023 பெப்ரவரி 28 ஆம் திகதி இது உறுதிப்படுத்தப்பட்டது. எனினும் கணிக்கப்பட்ட தாக்க மண்டலங்கள், இந்தியப் பெருங்கடலில் இருந்து பசிபிக் பெருங்கடல் மற்றும் மேற்கிலிருந்து அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை வரை நீண்டுள்ளது. இதன்படி 2046, பெப்ரவரி 14 அன்று மாலை 4:44 மணிக்கு இந்த தாக்கம் ஏற்படுவதற்கான ஏதுக்கள் உள்ளன. 165-அடி கொண்ட 2023 DW என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சிறுகோள், பூமியுடன் மோதுவது 114 ஆண்டுகளுக்கு முன்பு சைபீரியாவில் மோதிய துங்குஸ்கா 12-மெகாடன் நிகழ்வுடன் ஒப்பிடப்பட்டுள்ளது. இந்த 160-அடி சிறுகோள் ஒரு அணு வெடிப்பை போன்ற தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன்போது ஏற்பட்ட தாக்கம் ஒரு பெரிய பெருநகரத்தை அழித்திருக்கும் திறனைக் கொண்டிருந்தது. எனினும் அது ஒரு காட்டில் வீழ்ந்தபோது, 80 மில்லியனுக்கும் அதிகமான மரங்கள் தரைமட்டமாகின. ‘இத்தகைய நிகழ்வுகள் சராசரியாக 100,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்வதாக நாசா கூறுகிறது.
அடுத்த செய்தி
15 hours முன்பு
தன்னம்பிக்கை வளர்ப்பது அவசியமா? அப்போ இந்த எளிய பழக்கங்களை கடைப்பிடிங்க!
15 hours முன்பு
காலையில் எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மையா? இனிமேல் தவிர்க்காதீர்கள்!
15 hours முன்பு
அடுப்பே இல்லாமல் ஆந்திரா பாணியில் அசத்தல் ரசம்… எப்படி செய்வது?
15 hours முன்பு
பன்னீர் முட்டை இட்லி: எடை குறைப்புக்கு சிறந்த தேர்வு!
3 days முன்பு
குடல் புற்றுநோய்: ஆரம்ப அறிகுறிகளை அறிந்து கொள்ளுங்கள்!
3 days முன்பு
சோயா மட்டன் சுக்கா: வெறும் 5 நிமிடத்தில் மட்டன் சுவையில் சோயா சுக்கா!
3 days முன்பு
புற்றுநோயை தடுக்கும் ப்ராக்கோலி மிளகு வறுவல் – ஆரோக்கியமான ருசியான உணவு!
3 days முன்பு
வாழைப்பூ பிரியாணி: ஒரு முறை செய்து பாருங்க அப்புறம் விடவே மாட்டீங்க!
6 days முன்பு
கட்டுக்கடங்காத முடி வளர்ச்சிக்கு உதவும் பாசிப்பருப்பு ஹேர் பேக் – இந்த ஒரு பொருள் இந்தாலே போதும்!
6 days முன்பு
தோசைமா இல்லாமல் தோசை? இரண்டு பொருட்களால் சுவையான தோசை செய்வது எப்படி!
ஏனைய செய்திகள்
Close