இலங்கை
நிலவும் சீரற்ற காலநிலை: இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு.

ஹிகுராக்கொட, மின்னேரிய பிரதேசத்தில் வீடொன்றில் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் 23 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயான ரசிகா சாமோதனி என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது உயிரிழந்த பெண்ணின் ஒரு வயதுடைய மகளும், அவரது கணவரும் காயமடைந்த நிலையில் பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.