இலங்கை
வைத்திய சேவையாளர்களால் 24 மணிநேர வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுப்பு !
அரச வைத்தியசாலை ஆய்வுக்கூட வைத்திய சேவையுடன் தொடர்புடைய ஐந்து தொழில் பிரிவுகளைச் சேர்ந்த சுகாதார பணியாளர்கள் அடையாள வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர். கதிரியக்க தொழில்நுட்ப வல்லுனர்கள் சங்கத்தின் தலைவர் சானக்க தர்மவிக்ரம ஆட்சேர்பின் போது நிலவும் பிரச்சினை, கொடுப்பனவு வழங்கப்படாமை உள்ளிட்ட ஏழு கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இன்றைய தினம் (24.08.2023) அடையாள வேலை நிறுத்தம் தெரிவித்துள்ளாா். இதன் காரணமாக சி.டி. பரிசோதனை, எக்ஸ் ரே பரிசோதனைகள், எம்.ஆர்.ஐ. பரிசோதனை, சகல இரசாயன பரிசோதனைகள் முடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.